பர்வதம்; ஊர்வசி - என்பவற்றைத் தமிழொலியாக்கி பருப்பதம்
(தேவாரம்) உருப்பசி (க.
ரா.) எனத் திரித்ததும், நோக்குக.
பௌத்தம், கௌடிலியன், சைனா, சௌரி என எழுதாமல் முதலெழுத்து
வரும் முறை நோக்கிப் பவுத்தம்,
கவுடிலியன், சீனா, சவுரி என்றல் நன்று.
Will
என்பதன் நுண்ணொலி ஒர்ந்து (உ) வில் உயில் என
அழைக்கும்
மாண்பறிந்து உவிலியம் தெல் என்று பெயர்த்தல் கடன். தேஜ(ஸ்)சிங்
என்பவன் தேசிங்கு
எனத் தமிழ் மன்னன் ஆனது தமிழ் மண் வீச்சு.
சித் + அம்பலம் = சிற்றம்பலம்; அதி + புதம் = அற்புதம் எனத்தகரம்
றகரமாதல் தமிழ்நாஉராய்வே.
இராசராசன் என்பதன் முன் ரகத்திற்கு இகரம்
இடலே சாலுமன்றி இடைவருதற்கு வேண்டா என்பதுணர்தலும்
(கம்பராமாயணம்) ஒரு காட்சி.
ஈ(யூ)ரோப் - என்பதை ஐரோப்பா என அழைத்ததுபோல்
(Enstin)
ஈன்சுதீன் - ஜன்சுதீன் என
அமைப்பதும், பெட்ரோல் - என எழுதாது பெற்றோல் எனக் குறித்தலும், மெட்ரிக் எடையைப்
பொருள் புலப்பட மேற்றிக்கு என நீட்டி ஒலித்தலும் இங்கமைக்கலாம்.
இட்(டு)லர், கால்டுவெல் போலத் திரிக்கலாதனவற்றைக் கொள்க. வடமொழியில் எதிர்மறுத்துவரும்
அ என்னும் முன்னொட்டுத் தமிழில் அல் நாகரிகம் எனச் சிறுபால் வழங்கினும், அல் பொருள் (திரிகடுகம்)
(வேற்றுமை) அல்வழி, அல்திணை (தொல்) என வரினும் அநீதி - முறைகேடு, நயனின்மை. அநாதி - தொல்பழமை
எனப் பின்னொட்டுச் சேர்த்தும், உறுபொருள் கூறியும் முடித்தல் தமிழ் மரபு.
---
|