7, தொடரியல்
மூவகைத் தொடர்ப் பொருண்மை
381. நூ: எழுத்துப் பூக்களின் கொத்துச் சொற்களால்
தொடுக்கும் மாலையாம் தொடர்தான் பொருள்தரு
நோக்கால் நான்காய் நுவலப் படுமே;
ஆக்கம் ஆங்கில நாரால் அமையும்.
பொ: எழுத்துகளாய பூக்களை வரிசைச் சுருக்குக்கு வைக்கும்
கொத்தொத்த சொற்களால் அடுக்கித் தொடுக்கப்பட்ட
மாலையாய தொடர்
என்பது, பொருள் புலப்படும் நோக்கத்திற்கியைய நான்கு வகையாக
நவிலப்படும்.
இத்தொடராக்க முறை ஆங்கில நாரால் அமைத்துக்
கொள்ளப்படும்.
வி: எழுத்து, சொல், தொடர் முறையே பூ, கொத்து, மாலை என
உவமை கூறுதல் பண்டைய வழக்கே. சிதைவின்றிப்
பிரிக்கப்படும் வேற்றுமை
நயம் பற்றியும் உவமை பொருந்தும்.
Sentence7
வாக்கியம்
எனப் பிறமொழி
குறிக்கும் இது சொற்றடர், தொடரியம் எனக் கூறத்தகுவதேனும் தொடர்
எனப்பொதுவில்
இந்நூலில் பயிலும்.
382. நூ: செய்தி யுரைக்கும் செப்புத் தொடரும்
ஏவும் தன்மைக் கட்டளைத் தொடரும்,
உணர்ச்சி காட்டும் உணர்ச்சித் தொடரும்,
வினவிக் கேட்கும் வினாத்தொட ரும்அவை:
பொ: அவை, செய்தியை இயல்பாய்க் கூறும் செப்புத் தொடரும், ஏவி
ஆணையிடும் கட்டளைத் தொடரும்,
உணர்ச்சி மிகுதியைக் காட்டும்
உணர்ச்சித் தொடரும், வினாவெழுப்பிக் கேட்கும் வினாத் தொடரும்
என
நான்காம்.
வி: செப்புத்தொடர், இயல்புரையோடு பிறமூன்று தொடர்கட்கு
அம்மூவுணர்வல்லாது கூறும் தொடர்களையெல்லாம்
அடக்கும். ஏவல்
தொடரில் வியங்கோள் தொடர்களை முற்ற அடக்க முடியாது: பொருள்
நோக்கிக்
கொள்க. உணர்ச்சியாவது மாந்தனின் மனவெழுச்சி வெளிப்படும்
சொல்லமைப்புத் தொடர்கள்; எண்
வகை மெய்ப்பாடும் பொருந்தும்.
|