பக்கம் எண் :
 
அந

அந்தோ, அம்மகோ, ஐயகோ (ஐயோ) அச்சோ (அச்சச்சோ) அகோ (வாரும் பிள்ளாய்) யார் பெறுவார் அச்சோவே-கண்டாய், ஆவா, கெட்டேன்; (ஏலாதி)

ஓ கொடியாயெனும்  }  (கம்பராமாயணம்)
ஆ கொடிதேயறம்
ஆ ஆ - ஆவா - ஆகா என இணைந்துவரும்;
ஓ ஓ - (ஓவோ) - ஓகோ என இணைந்துவரும்;

    ஓகோ என்பது மகிழ்வு, வியப்பு போல்வனவற்றிற்கு ஆகியது போன்றே ஆகா என்பதும் அமைவுற்றது. இஃது ‘ஆஹா’ என்னும் வடமொழியுருவம் அன்று: எல்லா (Hollo), சிவசிவ - புதிய உணர்வுகள்.

    நான் வாரேனோ என்னும் விடைபடு வினாத்தொடரும் வினாத் தொடரே! ஏனெனில் தொடர், பொருட்பாட்டு வகையான் சொற்குறித்தே பகுக்கப்படுதலின்.

சா: 1. இந்தியப் பெருநாடு உலகரங்கத்தில் உரிய மதிப்புப் பெறவில்லை.
  2. வாலி, வெளியே வா.
  3. நிலாவில் மாந்தன் நிலையாக வாழலாமாமே!
  4. உன் பாட்டனின் தந்தை பெயர் தெரியுமா?

383. நூ: தொடரெனப் படுவ(து)ஓர் எழுவாய்ச் செயலை
        முடிவுறக் கூறும் பயனிலை முற்றி
        இருசொல் முதலா நடப்ப தென்பர்.

    பொ: தொடர் என்று குறிக்கத்தக்கது ஓர் எழுவாயின் வினைப்பாட்டைப் பொருள் முடிவுபடக் கூறுகின்ற பயனிலையோடு சொற்றொடர் முற்றுப்பெற்று, இருசொல் முதலாகப் பல சொல்லால் நடக்கும் நடையுடையதென்பர்.
 

சா: (அ) கடல் பொங்கியது.
  (ஆ) கொக்கின் நிறம் வெண்மை.
  (இ) பால் வெண்ணிறம் உடையது.
  (ஈ) இயற்கையைக் கடவுள் என்று ஒப்புக்கொள்கிறவர்கள், அவ்வியற்கை வணங்குவதால் நன்மை செய்வதோ பிணங்குவதால் தீமை செய்வதோ இல்லை என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.