தொடர்
முக்கூறு
384. நூ: எழுவாய் முதலிலும் பயனிலை ஈற்றிலும்
செய்பொருள் இடையிலும் அமைவது தமிழ்த்தொடர்.
பொ: எழுவாய் முதலிலும் பயனிலை இறுதியிலும், செயப்படு பொருள
இடையிலும் அமைவது தமிழ்த் தொடர்
ஆகும்.
சா: அறிவியல் நிலவை வென்றது.
வி: எழுவாய், பயனிலை என்னும் தொடர்ப் பாகுபாடு - ஒரு தொடரை
மேலோட்டமாகக் கண்டு
பொருளுணரும் போது தேவையற்றதாய்த்
தோன்றலாம், ஆயின் பொருட் சிக்கல் ஏற்படினும் ஆழ்ந்த
நீண்ட தொடர்
சான்றோரால் அமைக்கப்படினும் அப்போது தப்பாமல் பொருள் கொள்ளக்
கைக்கொள்ள
வேண்டுவதாம்.
மற்று ஆங்கிலத்தில்-The
cat killed the rat
என்பதை இடம் மாற்றினால்
தொடர் வேறுபட்டுப்
பொருள் மாறுபட்டுப் போகும்.
ஆயின் புனை எலியைக் கொன்றது என்பதை எலியைப் பூனை
கொன்றது எனப்பொருள் பிறழாமல் இடம் மாறுவதைக்
குறிப்பதன்று நூற்பா.
மற்று, பொது வழக்காக வரும் தொடரில் முக்கூறுகளின் இடங்களைக்
கூறுகிறது.
எழுவாய்
385. நூ: எழுவாய் என்பது தொடர்ப் பொருள் தலைமை
பொ: ஒரு தொடரில் எழுவாய் என்பது அத்தொடரின்
பொருண்மைக்குத் தலைமை நிற்கும் முதன்மைச்
சொல்லாம்.
சா: உலகம் முன்னேறுகிறது. எது?
மக்கள் புதுமையை விரும்புகின்றனர். யார்?
வி: பொருள் நோக்குப் பற்றி முதல் வேற்றுமையாகக் கூறப்பட்டதே
இங்குத் தொடரின் சொல்லமைவு
பற்றி எழுவாய் ஆகும். ‘தலைமை’ என்றது
பொருள் தலைமையையும், தொடர்ச்சொல் தலைமையையும்
குறிக்கும்.
பயனிலை குறித்து அஃறிணையாயின் எது (எவை) என்றும்,
உயர்திணையாயின் ‘யார்’ என்றும்
வினா எழுப்பின் புலப்படும் வினைமுதல்
எழுவாய் என்பது சிறார்க்குக் கூறும் குறுக்குவழி.
|