|
386. நூ: முதலி யன ஆகியவை போன்ற
தொகுசொலும் என்பதும் எழுவாய் ஆகும்.
பொ: முதலியன, ஆகியவை போன்ற என்னும் தொகைக் குறிப்புச்
சொற்களும் என்பது என்னும் தனிக்
குறிப்புச் சொல்லும் எழுவாயாகும்.
வி: அடையொடு வருகின்ற எழுவாய் போலாது பல சொல் தொகுப்புக
குறியாதலின் இச்சொற்கள் எழுவாயாதல்
தனித்துக் கூறப்பட்டது.
இத்தொகுப்புச் சொற்கள் ஒன்றாய்த் தோன்றினும்-முதலியன-இங்குக்
கூறிய ஓரிரண்டு முதலாகப்
பிறவும்; ஆகியவை-இங்குரைக்கலாயின;
போன்றவை-இவையும் இவை போன்ற பிறவும்; என்பது - என்று
கூறப்படுவது என வேறு வேறு பொருள்படும். முதலிய, ஆகிய போன்ற
பொருள்கள் என எச்சமாய் முடிந்துவரின்
முடிப்புப் பெயர் எழுவாயாகும்.
சா: மனம் என்பது மார்பில் இல்லை
வாய்மை எனப்படுவது யாது?
387. நூ: சிறுதொடர் முடிவில் செய்யுமென் பயனிலை
இறுதியோ டொட்டிச் செயவினை யெச்சம்
தானே எழுவாய்த் தகுதி பெறுமே!
பொ: சிறு தொடர்களின் முடிவில் பெரும்பாலும் செய்யுமென்னும்
வாய்பாட்டுப் பயனிலை வினையாம்
இறுதிச் சொல்லோடு முன்னே
ஒட்டிவரும் ‘செய’ வாய்பாட்டு வினையெச்சம் தானே தொடர்ப்பொருள்
எழுவாய் என்னும் தகுதியைப் பெறும்.
உன்னால் சொல்ல முடியுமா?
அவனால் வரஇயலும்,
செய்யுமென் வாய்பாட்டின் எதிர்மறையும் அடக்குக.
மணிமேகலைக்கு ஆட வராது (வரும்)
நான் கடன் பெறவில்லை; என்பது ஒருபாற்றான் மேலதாய் அடங்கினும்
சப்பானில் இரும்பு இயற்கையாய்க்
கிடைக்கவில்லை என்பதில்
கிடைக்கவில்லை என்பது ஒரு சொல்லாம் ஏனெனில் என்னால்
செய்யமுடியவில்லை
என்பதில் செய்ய எனவும் வருவது முறையாகலின்.
அவளுக்குப் பாடத்தெரியும்.
பாடல் (தெரியும்) என்பதன் கடைக்குறையே இத்தொடர் முறை என்பது
(மொழிநூல் - மு.வ.)
பொருந்துவதின்று. பாடத்
|