வி: பிறபொருள் தொடர்பின்றித் தன்னியல்பாய் நிகழும் இவ்வினைகள் எதையும் செய்யாமை அறிக.
‘ஒரு பொருள் தனியெனும் மனிதரைச் சிரிப்போம்!’
-(பாவேந்தர்)
என்ற பாட்டடியை மனிதரைப் பார்த்துச் சிரிப்போம் எனச்
சொல்லியைபு கொண்டும் காட்டலாம்.
அன்றி, ஈண்டுக்கூறலுறும் நகை
எள்ளல் பற்றியதாகலின் ‘மனிதரை இகழ்வோம் எனப் பொருளியைபு
கொண்டும் கூறலாம்.
பொது
392. நூ: எழுவாய் பயனிலை செயப்படு பொருள்கள்
நழுவி வருவதும் தொடர்பினா லுண்டே.
பொ: தொடர்களில் எழுவாயும் பயனிலையும் செயப்படுபொருளும்
பொருள் தொடர்பால் நழுவியும் வருவது
உண்டு.
சா: ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும் வாயெல்லாம் செயல் (ஒருவன்)
அறவுரைத் திருக்குறள் பெரிதும் எழுவாய் ஒளித்தே இயலும்.
இங்கே வா; அதை வாங்கினேன். கதவைத் திற.
முன்னிருப்பான் தொடர்பால் எழுவாய் மறைந்தது. இதனைத் தோன்றா எழுவாய் என்றும் மறைநிலை எழுவாய்
என்றும் கூறுவர். பிறவுமன்ன.
செயப்படுபொருள்: |
(மதிப்பைக்) கொடுத்தால் பெறலாம் (நல்வினை)
கொடுத்தால் பெறலாம்.
(வாயிற்கதவைத்)
தட்டினால் திறக்கப்படும். (பெருவாழ்வுப் பேரின்பத்தைக்) கேட்டால் கொடுக்கப்படும். |
பயனிலை: |
கையில் காசு (கொடுத்தால்) வாயில் தோசை (கிடைக்கும்). கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
(விளையும்).
|
இவ்வாறு செயப்படு பொருளும் பயனிலையும் மறைந்து வருவது
பெரும்பாலும் விடுகதை, பழமொழி,
(பொன்மொழி) மரபுத் தொடர்கள்
முதலியவற்றினே அமையும்.
மூவகை வினைமாற்றம்
393. நூ: செய்வினை செயப்படுவினையென, தன்வினை
பிறவினை என்ன, உடன்பா டெதிர்மறை
வினையென மூவகை வடிவுறும் வினையே.
|