சா: அ: வருவான் - வருவிப்பான்;
செய்வான் - செய்விப்பான்
ஆ: இருந்தான் - இருப்பித்தான்;
பார்த்தான் - பார்ப்பித்தான்.
இ: திருந்தினான் - திருத்தினான்;
மயங்கினான் - மயக்கினான்.
திரும்புகிறான் - திருப்புகிறான்;
நனைந்தான் - நனைத்தான்.
ஈ: தேறுகிறான் - தேற்றுகிறான்;
கண்டான் - காண்பித்தான் - காட்டினான்
உண்டான் - உண்பித்தான் - ஊட்டினான்
ஆடினான் - ஆடுவித்தான் - ஆட்டினான் (ஆட்டுவித்தான்). என இரட்டை உருப் பெறலும் ஆகும்.
எழுந்தான் - எழுப்பினான்
என மாறிவருதல் சிறுபால்.
398. நூ: வினைகள் நிகழ்வதை மறுத்தல் இல்லா
இயல்பு வினையே உடன்பா டாகும்.
பொ: செயல் நிகழ்வதை மறுப்புச் சொல்லின்றி இயல்பாய்க் கூறுவது உடன்பாட்டு வினையாகும்.
சா: அவன் உண்டான்: அவள் படைத்தாள்.
செய்வினை, தன்வினை, உடன்பாட்டுவினை என்னும் இம்மூன்றனுக்கும்
வேறுபாடு பெரிதின்றாய்த் தோன்றும்.
ஆயின் அவற்றின் மாற்றுவினை
நோக்கியும், அத்தொடரில் அவை யாற்றுவினை நோக்கியும் அவ்வாறு
சுட்டப்படுதல் அறிக.
399. நூ: எதிர்ச்சொல் என்பது பொருட்பண் பெதிர்வாம்
எதிர்மறை தானே வினையுடன் படாமை
நு: எதிர்ச்சொல்லுக்கும் எதிர்மறைக்கும் வேறுபாடு கூறுகிறது.
பொ: எதிர்ச்சொல் என்பது பொருட்பண்பால் அமையும் எதிர்வு; எதிர்மறையோ வினைநிலைமையைக்
குறிப்பது.
ஆண் - பெண்; இரவு - பகல்; உயர்வு - தாழ்வு; தீமை - நன்மை;
அமர்ந்தான் - நின்றான்; நடந்தான்
- நின்றான்; இரு நிற்றலுக்கும்
வேறுபாடுணர்க. இவை எதிர்ச்சொல்; எதிர்மறை அடுத்துக் காண்க.
|