400. நூ: எதிர்மறை இன்மை மறுப்பிவை இசைக்க
இல்அல் ஆஇவை இடையில் அடையும்.
பொ: எதிர்மறை வினை, இன்மையையும், மறுப்பினையும் காட்ட இல்,
அல், ஆ என்னும் இவை
சொல்லினிடையில் வரும்.
சா: அ. வந்தான் - வந்திலன்; வருவேன் - வாரேன்.
ஆ. உண்டான் - உண்டிலன்; உண்ணலன்.
இ. உண்ணீர்; உண்ணோம்; உண்ணான்; உண்ணேன்.
மூன்றிடை நிலைவருமியல்பை உறுப்பியலில் கூறினாம்.
401. நூ: வழக்கில் நிகழ்விறப் பில்லை யாலும்
எதிர்வு மாட்டா வாலும் எதிர்மறை
பொ: வழக்குரையில் நிகழ்கால இறந்தகால உடன்பாட்டு வினைகள்
‘இல்லை’ எனுஞ்சொல் சேர்ப்பதாலும்,
எதிர்கால உடன்பாட்டு வினை
‘மாட்டா’ என்னுஞ்சொல் சேர்ப்பதாலும் எதிர்மறையாகும்.
சா: அவன் நேற்று வந்தான். அவன் நேற்று வரவில்லை.
அவன் இன்று வருகிறான் - அவன் இன்று வரவில்லை.
அவன் நாளை வருவான் - அவன் நாளை வரமாட்டான்.
வி: நடக்கும் - நடக்காது; நடவும் - நடவாது என்பது போலன்றி
கிடைக்கும் - கிடைக்காது; கிடையாது
- கிடைக்கும் என இச்சொல்
வருதலான் சிறார் ‘கிடையும்’ எனக்குதப்புவர்.
மூவகைத் தொடரமைப்பு
402. நூ: தொடர்ப்பொருள் நான்காய் அமையும் தொடர், சொல்
தொடர்பை நோக்க மூன்றாய் முடியும்.
பொ: தொடர்ப்படும் பொருளாற்றல் நான்கால் நான்காய்ப்
பிரித்துரைக்கப்பட்ட தொடர்கள்,
சொல்லமைப்புத் தொடர்பை
நோக்கமூன்றாய் முடிந்தியலும்.
403. நூ: அவையே,
சிறுதொடர், கூட்டுக்கலப்புத் தொடர்கள்.
பொ: பொருள் வெளிப்படை; சான்று
பின்னுள:
|