சிறுதொடர்
404. நூ: முகநிலை எழுவாய் ஒன்றொடு முற்றுப்
பயனிலை ஒன்றுவந் தொன்றல் சிறுதொடர்.
பொ: தொடர் முகத்திருக்கும் எழுவாயொடு
ஒரு பொருள் முற்றிய
பயனிலை வந்தியைபுபடுதல் சிறுதொடராகும்.
சா: மாந்தன் மனம் உடையவன்
இற்றைத் திரைப்படம் நாட்டைக் கெடுக்கிறது.
கூட்டுத்தொடர்
405. நூ: தலைமைக் கிளவியம் ஒன்றைத் தழுவி
ஒன்றோ பலவோ கூட்டுக் கிளவியம்
கூட்டாய் முடிவது கூட்டுத் தொடரே!
பொ: தலைமைக் கிளவியம் ஒன்றாக, அவ்வொன்றைக் குறித்து ஒன்றோ
பலவோ கூட்டுக்கிளவியம் கூடி
முடிவது கூட்டுத் தொடர் எனப்படும்.
(கிளவியம் - Clause) என்பதனைப் பின் நூற்பாக்கள்
விளக்கும்).
சா: அ, இதழ்கள் தம் விருப்பத்திற் கேற்பச் செய்தி
தருகின்றன; மக்களும் அதை நம்புகின்றனர்.
ஆ. மடலர்கள் (நிருபர்கள்) அரசியல் தலைவர்களிடம்
துருவி வினாவுகின்றனர்; ஆயின் அதுவே கொள்கையை உருவாக்குகின்றது.
கலப்புத்தொடர்
406. நூ: தலைமைத் கிளவியம் ஒன்றைத் தழுவி
ஒன்றோ பலவோ சார்புக் கிளவியம்
கலப்பாய் முடிவது கலப்புத் தொடரே!
பொ: தலைமைக் கிளவியம் ஒன்றாக, அவ்வொன்றைக் குறித்து
ஒன்றோ, பலவோ சார்புக்கிளவியம்
கலந்து முடிவது கலப்புத் தொடர்
எனப்படும்.
சா: அ. நகைச்சுவைப் பாங்கு நன்றாயினும், இன்று நச்சுச்சுவையாகி
நாட்டை
ஆட்டிப் படைக்கிறது.
ஆ. பாலுணர்ச்சி வெளிப்படையாய்ப் பரவிக்கிடப்பினும், இதுவே
பாலெதிர்
எளிமையை உருவாக்கி
|