உடற்கற்பினின்று உளக்கற்பிற்கு உயர்த்தும் என்று
அறிஞர் எதிர்நோக்குகின்றனர்.
வி: கூட்டுத்தொடர்க்கும்,
கலப்புத்தொடர்க்கும் வினையெச்சப்
பெயரெச்சங்களைப் போன்று ஓரொத்த நூற்பாவமைத்தது,
இயைபு
பற்றியும், மனனம் பற்றியுமே. கூட்டுத் தொடர்க்கும் கலப்புத் தொடர்க்கும்
வேறுபாடென்னெனின்
-தலைமைக் கிளவியம் ஒன்றேயாக, இணைக்கிளவியம்
(Co - ordinate clause)
(Subordinate clause) கலப்பது கலப்புத்தொடர் என்றும் கண்டறிக.
கிளவியம்
407. நூ: சிறுதொடர் போன்ற உருவொடு பெயர்வினை
ஒருதொடர் உட்படின் கிளவியம் ஆகும்.
பொ: சிறுதொடரைப் போன்ற
உருவத்தோடு எழுவாய்ப் பெயரும்
பயனிலை வினையும் கொண்டு ஒரு பெருந் தொடர்க்கு உட்படவரின்,
அஃது
பின் தொடர்க்குக் கிளவியம் ஆகும்
வி: கிளவிய விளக்கம் மூவகைத் தொடர்க்கு முற்கூறப் படுவதேனும்
சிறுதொடர் போலும்
உருவமைப்புடைமையின் சிறு தொடர் கூறப்புகுந்து
பிறதொடர் முற்றிப்பின்னுரைக்கப்பட்டது. சிறுதொடர்
பொருள்
முற்றிக்கூட்டுக் கலப்புத்தொடரில் முன்னிற்பதேனும் பின்வரும் பொருள்
முற்றாத குறைத்தொடரும்
கிளவியம் எனப்படுதலான் சிறுதொடர் ‘போன்ற’
என்று ஒரு புடைஒப்புக் கூறப்பட்டது. கிளவி
(சொல்)யம் என்பது clause
என்பதற்கு ஈடாக ஒலியும் பொருளும் நோக்கிப் பாவாணரால் பொருந்தப்
படைக்கப்பெற்றது.
408. நூ: தொடர்களை ஆக்கவும் மாற்றவும், கிளவியம்
பெயரே பெயரெச்சம் வினை யெச்சம்
எனமூ வுருவாய் இயங்கும் என்பா.
பொ: தொடர்களை உருவாக்கவும் ஒன்றை மற்றொன்றாக மாற்றவும்
வேண்டின் கிளவியம் பெயர், பெயரெச்சம்
வினையெச்சம் என்று
மூன்றுருவாகி மாறி இயங்கும் என்று கூறுவர். இதனை ஆங்கிலத்தில்
முறையே Noun
clause, Adjective clause, Adverb clause என்று
கூறுவர்.
தமிழ்ப் பயிற்று முறை என்ற நூலில் திரு. ந. சுப்பு(ரெட்டியார்)
தொகுத்துத் தந்துள்ள தொடர்கள்
சொல்லாலும் பொருளாலும் சிறத்தலின்
அவையே சில மாற்றத்தொடு கீழ்க் குறிக்கப்பட்டுள்ளன.
|