தனி - கூட்டு - கலப்புத் தொடர் மாற்றங்கள்
அ: தனித்தொடர்:-உலகப்பன் நன்றாய்ப் படித்தும் தேறவில்லை.
மாற்றிய கூட்டுத்தொடர்:-உலகப்பன் நன்றாய்ப் படித்தான்; ஆனாலும்
தேறவில்லை.
ஆ: கூட்டுத்தொடர்:-வள்ளியப்பன் ஏழுமுறை தேர்வு எழுதினான்; ஒரு
முறையும்
தேறவில்லை.
மா,த: வள்ளியப்பன் ஏழுமுறை தேர்வெழுதியும் தேறவில்லை.
இ: கலப்புத்தொடர்:- திரைப்படம் வந்ததால் நாடகம் நின்றது.
மா.கூ: திரைப்படம் வந்தது; நாடகம் நின்றது.
இ: கூட்டுத்தொடர்:-சிலர் முற்போக்கிற்கு வழி கோலுகின்றனர்; சிலர் அதற்கு
முட்டுக்கட்டை போடுகின்றனர்.
மா.க: சிலர் முற்போக்கிற்கு வழிகோலச் சிலர் அதற்கு முட்டுக்கட்டை போடுகின்றனர்.
தலைமைக் கிளவியச் சார்புக் கிளவியப் பரிமாற்றம்
1. தலைச் சங்கம் இருந்த தென்மதுரை இன்று கடலுள்
முழுகிக் கிடக்கிறது.
இன்று கடலுள் முழுகிக் கிடக்கின்ற தென்மதுரையில் தலைச்
சங்கமிருந்தது.
2. வீடு வெந்த பின்பு நெருப்பணைக்கும் பொறி வந்தது.
நெருப்பணைக்கும் பொறி வருமுன் வீடு வெந்து விட்டது.
நேர்
நேரல் கூற்றுகள்
409. நூ: ஒருவர் கூற்றை அவரது சாயலில்
சிறிதும் மாற்றா துரைத்தல் நேர்க்கூற்(று);
அவரைப் படர்க்கை இடத்தில் இருத்தி
சிலசொல் மாற்றுதல் நேரல் கூற்று.
பொ: ஒருவர் உரையை அவர் கூறிய முறையிலே சிறிதும் மாற்றமின்றி
வாங்கிக் கூறுவது. நேர்க்கூற்று;
அவரைப் படர்க்கையாக இருத்தி
அதற்கேற்ப அவ்வுரையில் சில சொல் மாற்றித் தன்னுரையாகக்
கூறுவது
நேரல் கூற்றாம். (இவற்றைத் தற்கூற்று அயற்கூற்று என்றும் மொழியலாம்.)
|