411. நூ: பயனிலை வினைமுற் றனைத்தும் கால
இடைநிலை பெற்ற துவ்விறு தொழிற்பெயர்
உடன்ஆக என்பதைப் பெரும்பாலும் பெறுமே.
பொ: பயனிலையாக வினைமுற்றுகள் எல்லாம் பெரும்பாலும் காலஇடை
நிலையைப் பெற்றும், துவ்விறுதிநிலை
பெற்றுவரும்-தொழிற்பெயருடன் ஆக
என்பதைப் பெற்றும்மாறும்.
சா: ‘வருவேன்’ என்று - வருவதாக
‘வருகிறேன்’ என்று - வருவதாக, வந்ததாக
‘வந்தேன்’ என்று - வருவதாக. (வருகிறதாக)
நேர்:
‘நாளை செல்வேன்’ என்று நந்தனார் நினைத்தார்.
நேரல்:
மறுநாள் செல்லலாமென நந்தனார் நினைத்தார்.
வி: நிகழ்காலச் சொல் பிறவிருகாலமாகவும் பொருள் சூழல் நோக்கி
மாறிவரும். இன்று என்னும்
சொல் அவ்வாறே நேற்று, நாளை என்று மாறி
வருதலும் கொள்க, ‘இன்று’க்கு அன்று - என வருவது
சுட்டுப் பற்றியது.
412. நூ: ஏவல் எல்லாம் எச்சம்முற் றாகும்.
பொ: ஏவலாய் வரும் நேரல்கூற்றுகள் அயற்கூற்றாகும் போது
எச்சமாகவோ முற்றாகவோ மாறும்.
சா: 1. “செய் அல்லது செத்துமடி.” என்றார் காந்தி.
2. செய்யவேண்டும்; அல்லது செத்துமடிய வேண்டும் என்று கூறினார் காந்தி
1. ‘தீமை செய்யாதீர்’ என்று அறநூல் கூறும்.
2. தீமை செய்யக் கூடாதென அறநூல் கூறும்.
413. நூ: முன்னிலை அண்மை நாள்எதிர் இவற்றைப்
பின்னிலை யி்ன்றிச் சொல்லல் வேண்டின்
சில்நிலை மாற்றம் செய்தல் இல்லை.
பொ: முன்னிலை தன்மை இடச் சொற்களும் அண்மை சேய்மைச்
சுட்டுச் சொற்களும், நேற்று, நாளை,
நாட்பெயர்களும் ஆகிய இவற்றைப்
பின்னணி உணர்ச்சி இல்லாமல் கூறும்போது சில நிலைகளில்
மாற்றம்
செய்தல் இல்லாமல் நடக்கும்.
நு: வாய்பாட்டு முறையில் எல்லாச் சொற்களையும் கண்மூடி
மாற்றிவிடாது பொருள் மாற்றும்போது நிகழும்
சில இயல்பு நிலைகளைக்
கூறுகிறது.
|