சா: |
1. |
தமிழ்நூல்,
ஒழுக்கத்தின் விழுப்பம். |
|
2. |
இந்தியாவில் குறித்த பொழுதில் செயற்படுவது குறைவு. |
|
3. |
2003. 1 (தை) 2ஆம் நாள் திருவள்ளுவர்
நாள். |
|
4. |
ஒ. நா. உ.
(U.N.O) திரு.
வி. க. |
|
5. |
க. நா. அண்ணாத்துரை என முன்னெழுத்தும்
சொற்
சுருக்கத்திலடங்கும். |
|
6. |
இந்திரா காந்தி. |
முக்காற் புள்ளி (வரலாற்றுக்குறி)
417. நூ: சிறுதலைப்பு உள்ளெண் முக்காற் புள்ளியாம்
அதனிடை வெளியே சிறுகோடு படுப்பின்
தொகைவிரி செய்தி அறிவிப்பு, தேர்வுத்
தொடர்வினாப் பின்வர லாற்றுக் குறியே.
பொ: சிறு தலைப்பிற்கும், உட்பிரிவெண்ணிற்கும் முக்காற் புள்ளியாம்.
அதனிடையில்
வெளிப்புறமாகச் சிறு கோடு இட்டால் - தொகைச் செய்தியை
விரித்தற்கும், அறிவிப்பிற்கும்,
தேர்வில் கீழ்க்காணும் வினாவிற்கும் பின்
வரலாற்றுக் குறியாக அமையும்.
சா: |
1. |
முன்னுரை:
முடிவுரை: |
|
2. |
I 1: |
|
3. |
ஐந்து வகைப் பொறியாவன:
காது, கண், மூக்கு, நா, தோல்.
புலன் ஐந்து வகைப்படும்: அவை,
கேட்டல், காணல், மோத்தல், சுவைத்தல், ஊறு
என்பன. என்று இவ்வாறு வரின் முக்காற் புள்ளியே
இடம் பெறும். |
|
4. |
இதனால் எல்லாருக்கும் அறிவிப்பதாவது: |
|
5. |
கீழ்க்கண்டவற்றுள்
நான்கினுக்கு விடை இறுக்க: |
|