பக்கம் எண் :
 

அரைப் புள்ளி

418 நூ: ஒரு பொருள் குறிக்கும் பலசிறு தொடர்கள்
       கருத் தெதிர் பகுதியில் வரும்அரைப் புள்ளி.

    பொ: ஒரு தொடரில் எழுவாய்த் தொடரொடு பலபயனிலை, சிறு
தொடர்களிலும் முதல் தொடரின் எதிர்க் கருத்தைக் குறிக்கும் பொழுதும்
அரைப்புள்ளி வரும்.
 

சா: 1. பாரதிதாசனார் ஓர் அரசியற் புரட்சிப் பாவலர் மட்டுமல்லர்; ஒரு குமுகாயப் பாவலர்; ஒரு செவ்விலக்கியப் பாவலர்; ஒரு குழந்தைப் பாவலர்.
  2. ஏசுவின் கருத்து அவர்காலத்தில் புதுமையாயிருந்தன
இப்போது பல பழமைபட்டன.

தொடரில் என்னாது பகுதியில் என்றமையான்:-
  சாதிக் கொடுமை அமெரிக்காவிலும் உள்ளது; ஆம்
  வண்ணக் கொடுமை என்ற உருவத்தில் உள்ளது,
  என்று கருத்தை விரிக்கும்போதும் வருவது கொள்க.

காற்புள்ளி

419. நூ: பெருவர வுடைய தகுகாற் புள்ளி
       பெயர்கள் தொடுப்பு, முகவரி, பட்டம்
       மடல்விளி, மேற்கோட் குறிமுன்(பு), இலக்கம்,
       பெருந்தொடர் எழுவாய், எச்சப் பயனிலை,
       இணைச்சொல், இயைசொல் இவற்றின் பின்வரும்.

    பொ: வழக்காற்றில் மிக வரும் தகுதி வாய்ந்த காற்புள்ளி, பெயர்களைத்
தொகுத்துக் கூறுமிடத்தும், முகவரி விரியிடத்தும், பட்டம் ஒவ்வொன்றின்
பின்னும், மடலில் விளியிடத்தும், மேற்கோட்குறிக்கு முன்னும், எண்ணிடை
இலக்கங் குறிக்குமிடத்தும் பெருந்தொடரில் எழுவாய் விளங்கவும்,
தொலைவுபட்ட எச்சப் பயனிலை சுருங்கவும், இணைச்சொல்லிடத்தும் முதல்
தொடரொடு மறுதொடரை இயைபுறுத்தும் சொல்லிடத்தும் வரும்.

    சா: 1: இயல், இசை, கூத்து என்ற முப்பிரிவுடையது பழந்தமிழ். சேரனும்
சோழனும் பாண்டியனும் மூவேந்தர் எனப்படுவர் என்றவிடத்து உம்மையே
பிரித்தலான் காற்புள்ளி யிடாமலும் எழுதலாம்.