பக்கம் எண் :
 
2

2.   கடலூர்,
மஞ்சைக்குப்பம்,
“தென்மொழி” ஆசிரியர்,
பெருஞ்சித்திரன்.

3. முனைவர் சி. இலக்குவனார்; க மு., கீ.க.மு., மெ.மு.,  (M,A., M.O.L., Phd.).

4. தொண்டுடையீர்,
        வணக்கம்; வாழி!

5. திரு, வி. க., “உயிர் தமிழுக்கு; உடல் மண்ணுக்கு” என்று கூறினார்.

6. 1,23,456.

7, திருக்குறள், ஈராயிரமாண்டுகட்கு முன் தோன்றியதாகலான்,
இந்நூற்றாண்டிற்கு ஏலாத கருத்துகள் எத்துணை விழுக்காடு என்று கூறிட்டுக்
கூறினால், புதுமைக்கு ஏற்றதாகும்.

அசோகச் சோலையில் சீதை, அழுதல், விழுதல், தொழுதல், அன்றி
வேறொன்றறியாள் - என வரும் தொழிற் பெயருக்கும் எழுந்தாள்,
விழுந்தாள் என வரின் அத்துண்டுப் பயனிலையிடத்தும் வருவது கொள்க.

8. புதுமை நட்பிற்குப் பிசிராந்தை - கோப்பெருஞ்சோழன், இலெனின் -
ஏங்கெல்சு, இவர்கள் எடுத்துக்காட்டாகலாம்.

9. உலகம் என்பதை ஆகுபெயராக்கிப் பெறும் உணர்வுகள் அனைத்தையும்
ஆக்குவது மனமே; ஆதலால், அதுவே உலகப்பொருள் எல்லாவற்றிலும்
உயர்ந்தது. (இது போன்ற இயைபுச் சொற்கள் பிறவற்றை இடையியலிற்
காண்க).

420. நூ: வினாத்தொடர் பின்வரும் வினாக்குறி; உணர்ச்சி
        வழாத்தொடர் பின்வரும் உணர்ச்சிக் குறியே.

    பொ: வினாவும் தொடருக்குப் பின்னே வினாக்குறிவரும்; உணர்ச்சி
குன்றாத தொடருக்குப்பின் உணர்ச்சிக் குறிவரும்.

    சா: வினாமுதற்சொற்களும், இறுதிநிலைகளும் வருந்தொடர்கள்
வினாத்தொடராம்.

கடவுள் உண்டா? இல்லையா? என்பது பலநூற்றாண்டுப் போராட்டம்.