யார் அங்கே? அவர் இவரா?
மேற்கோட்குறித் தொடர் வருங்கால் உட்பட்டு வினாக்குறி வரும்.
அந்தோ! கிழக்கு வங்கக் கொடுமையை நினைத்தாலே நெஞ்சு
நெகிழ்கிறதே!
ஆப்பிரிக்க உரொடீசிய ஆட்சியை உலகு ஒன்றும் செய்ய
இயலவில்லையே! என்னே உலக நிலை!
என்னே! என்னே! என்று அடுக்கும் போதும் ஒரு குறியல்லது இரண்டு
மூன்று குறிகளிடுவது பயனிலதே.
இரட்டை மேற்கோட்குறி
421. நூ: நேர்க்கூற்று மேற்கோள் இரட்டை பெறுமே.
பொ: நேர்க்கூற்றுச் செய்தித் தொடக்கத்தும் முடிவிலும் இரட்டை
மேற்கோள் குறி பெறலாம்.
சா: “கடவுட்குக் கதவும் பூட்டும் ஏன்?” என்கிறார் பெரியார் ஈ. வெ. இரா.
“தென்னாட்டான் திறந்த வாயான் என்று தில்லியான் தெரிந்து
கொண்டான்.” எனப் பாவாணர் தனியுரையில்
கூறுவார்.
ஒற்றை
மேற்கோட்குறி
422. நூ: தனிச்சொல், எழுத்து விளக்கம், பிறர்நூற்
பெயர்,உரைப் பகுதி, மரபுத் தொடர்கள்,
இரட்டை யுட்கூற்(று) ஒற்றைக் குறியே.
பொ: தனிச் சொல்லையோ, தனி
எழுத்தையோ, விளக்கிக் காட்டும்
போதும், பிறர் நூற்பெயரையோ, பாடல், உரைப் பகுதியையோ கையாளும்
போதும் மரபுத் தொடர்புகளான பழமொழி, விடுகதை, உவமைத்
தொடர்களைப் பயன்படுத்தும் போதும்
இரட்டை மேற்கோட்குறியில்
இன்னொரு கூற்று உட்பட்டு வரும் போதும் ஒற்றை மேற்கோட்குறி
பயன்படும்.
சா: |
1. |
கண்ணகி கனவில் அயலூரார் தம்மேல் ‘இடு தேளிட’க் கண்டாளாம். |
|
2. |
‘ஆதிபக‘ல’வன்’ என்பதுதான் முதற்குறளின் சொல் உருவம் என்றால் தளை முரண்படுகிறது, |
|