3. ‘மணி வாசகர்’ செய்த ‘திருவாசகம்’ தேன்கூடு.
4. ‘எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது’ என்று அண்ணாவின்
கல்லறையில் பொறிக்கப்பட்டுள்ளது.
வள்ளலார் பாடலை ‘நான் கலந்து
பாடுங்கால் என்ஊன் கலந்து வுயிர்கலந்து’ இனிக்கிறது.
5. ‘செத்ததன் வயிற்றில் சிறியது பிறக்கின்,
எத்தைத் தின்று எங்கே கிடக்கும்’
என்னும் வினாவிற்கு ‘அத்தைத் தின்று அங்கே கிடக்கும்’ என்பது
விடையாம்.
‘கல்லிலே நாருரித்தல்’ என்ற பழமொழிக்குத் ‘தேங்காயை’
என்னுஞ்சொல்லை இடையே சேர்த்துப்
பொருள் காணல் வேண்டும்.
6. கண்ணன் குந்தியிடம் “துரியனுக்குச் செஞ்சோற்றுக் கடன்
கழிப்பதன்றியும், தனியாடலில்
அவன் மனைவியின் முன்தானை முத்துகளை
உதிர்த்தபோது ‘எடுக்கவா கோக்கவா’ என்று கேட்டானே,
அதற்கேயும் நான்
மனமாறு மாறில்லை” என்று நன்றியுணர்வொடு நவின்றான்.
பிறைக்கோடு
423. நூ: தொடரிடை அயற்சொல், சிறுபிரி வெண்கள்
படர்புதுக் கருத்தில் புகழ்பிறைக் கோடே.
பொ: தொடரிடையே அயற் சொல் காட்டுமிடத்தும், பெரும்
பிரிவிற்குட்படும் சிறுபிரிவெண்கள்
குறிக்குமிடத்தும் புதுக்கருத்துப்
படருமிடத்தும், பரவலாகப் பயன்படும் புகழுடைய பிறைக்கோடு
அமையும்.
சா: 1. காசோலையிலும்
(cheque) தமிழில் மாற்றக் கையொப்பமிட அரசு
ஆணையிட்டுள்ளது,
2. அ: கீழ்க்கண்ட வினாக்கட்கு
நான்கிற்கு விடை எழுது
3: கூர்தலறக் கொள்கை (பொருள் வளர்ச்சி மாற்றம்-பரிணாமவாதம்) சமயப் பொய்களுக்கு
ஒரு சம்மட்டியாயிற்று.
424. நூ: பிறையினை அகப்படுத் திடும் அடைப் புக்குறி.
பொ: பிறைக்கோட்டுச் செய்தியை உட்கொண்டு மேற்பட்ட செய்திக்கு
அடைப்புக் குறியிடப்படும்.
|