பக்கம் எண் :
 
New Page 1

    பொ: தொடர்க் கிடையே சொல்லும், எழுத்தும் விடுபட்டதைக்
காட்டவும் ஓரிடத்தை வழிகாட்டிக் கை காட்டவும் அம்புக்குறி பயன்படும்.

    சா: சுப்பிரமணியன்

எடுப்பதூஉம் எல்லாம் வல்லது மழை.

429. நூ: பாட்டினும் உரையினும் பொருள்தெளி வுறுகண்
        ணோட்டமும், நோட்டமும் கொள்ளுதல் பொருள்கோள்

    பொ: பாட்டிலும் உரையிலும் மேலோட்டப் படிப்பில்
 விளங்காதவிடத்துப் பொருள் தெளிவுறுதற்குச் சொற்கண்ணோட்டமும்
கருத்து நோட்டமும் இட்டுப் பொருள் கொள்ளுதல் பொருள் கோள் ஆகும்.

    சா: உரைச்சான்று விரியுமாகலானும், பாட்டுச்சான்று உரைச்சான்றுக்கு
எளிதாய முற்சான்றாமாகலானும் பின்பாச்சான்றுகளே பரவிக்கிடப்பன.
உரைநடை பெரிதும் ஆற்றோட்டத்தினில் அடங்கும்.

430. நூ: அஃது
        ஆற்றின் ஓட்டம், கொண்டுகூட் டிரண்டே

         பொருள்கோள் இவ்விருவகை; சான்றுபின் நோக்குக.

431. நூ: ஆற்றின் ஒழுகல்போல் இடையற வின்றித்
        தோற்றும் சொற்பொருள் தொடர்வதாற் றோட்டம்

    பொ: ஆற்றின் ஒழுகுதலைப்போல இடையில் ஆறுதலின்றி
தொடர்படுகின்ற சொல்லும் பொருளும் தொடர்ந்து ஓடுவது ஆற்றோட்டப்
பொருள்கோள்.

    சா:  ஆற்றவும் கற்றார் அறிவுடையார்; அஃதுடையார்
     நாற்றிசையும் செல்லாத நாடில்லை; அந்நாடு
     வேற்றுநாடாகா; தமவேயாம்: ஆயினால்
     ஆற்றுணா வேண்டுவதில்   

(பழமொழி)

    சிறு தொடர்களால் அமைந்த இப்பாடல் - அறிவு - அஃது என்றும்,
நாடு - அந்நாடு என்றும் ‘ஆகா - ஆம்’ என்றும், ஆம் - ஆயினால்
என்றும் சொல்லொடு சொல் தொடர்ந்து நீரலை உந்தி நெட்டோட்டம்
கொண்டவாறு போல அமைந்திருக்கும் அமைப்பு நோக்குக.