பக்கம் எண் :
 
மற

மற்றொன்று;-

     ஆரஞ்சுப் பழத்தையும் தம்பி-நீ
          ஆராய்ந்து பார்த்தபின் வாங்கு.
     நீர்சுண்டி இருக்கவும் கூடும்-மிக
          நிறையப் புளிக்கவும் கூடும்.
     ஓரொன்றை உண்டுபார் தம்பி-அது
          உகந்ததென்றால் பின்பு வாங்கு.
     பாரெங்கும் ஏமாற்று வேலை-மிகப்
          பரவிக் கிடக்கின்றது தம்பி.

                        -(இளைஞர் இலக்கியம்)

432. நூ: சொல்லும் தொடரும் எழுத்தும் கருத்துச்
        செல்லும் வகையான் ஓரடி பலவடி
        முன்பின் கொண்டு கூட்டல்பலவே.

    பொ: சொல்லும் தொடரும் எழுத்தும் - கருத்தோட்டத்தை ஒட்டி
ஓரடியிலோ பலவடியிடையிலோ முன்னும் பின்னுமாகக் கொண்டு கூட்டிப்
பொருள்பயக்கும் நிலைபல.

    வி:   எழுத்து எனமுற் கூறாதது
          ‘காவீதேஓமா டு டு டு டு டு (காளமேகம்) எனவருதல்

மிகச் சிறிதாதல் நோக்குடைத்து.

இக்கொண்டு கூட்டைப் பண்டை நூல்கள் - நிரல்நிரை, விற்பூட்டு, தாம்பிசை,
அளைமறி பாம்பு, அடிமறி மாற்று, மொழி மாற்று, சுண்ணமொழி மாற்று
முதலியனவாகப் பெருக்கிக்கூறும். அவை கொண்டுகூட்டுள்
அடங்குமாறுணர்க.

    சா:   ‘இன்மை யரிதே வெளிறு-வெளிறு இன்மை அரிதே.

                                      -(குறள்)

          ‘கரையாடக் கெண்டை கயத்தாட மஞ்ஞை
     சுரையாழ அம்மி மிதப்ப-வரையனைய
     யானைக்கு நீத்தும் முயற்கு நிலையென்ப
          கானக நாடன் சுனை’

என்ற பழம்பாட்டு ஓரடிக்குள் சொல்மாறு பாட்டு.

         ‘இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே’

‘(வள்ளுவனைப் பெற்றதால்) பெற்றதே புகழ் வையகமே என்னும் பாவேந்தர்
பாட்டிறுதி தலைகீழாக தொடரியைபு படுதல் நோக்குக.