பொ:
தன்னைக் குறிக்கும் தன்மையும் தனக்கு முன்னிருப்பதைக் குறிக்கும்
முன்னிலையும், தானும்
முற்பொருளுமன்றி மூன்றாம் பொருளாய்
அண்மையிலோ, சேய்மையிலோ இருப்பதனைப் படர்ந்து சென்றுரைக்கும்
படர்க்கையும் என்று இடம் மூவகைப்படும்.
தன்மை |
முன்னிலை |
படர்க்கை |
ஒருமை:
யான் நான்
வந்தேன் |
நீ வந்தாய் |
அவன் வந்தான்,
அவள் வந்தாள்,
இது வந்தது. |
பன்மை:
நாங்கள் யாங்கள்
வந்தோம் |
நீர் வந்தீர், நீங்கள் வந்தீர்கள் |
அவர்கள் வந்தார்கள்
இவை வந்தன. |
52. நூ: தன்மைப் பெயர்கள் யான் நான், யாம் நாம்
யாங்கள் நாங்கள்என் றாறேஇருமை;
நீ நீர் நீங்கள் என்பன முன்னிலை;
வினாச் சுட்டடியாய்ப் பிறந்த பெயர்கள்
தனிப்பெயர் பிறபெயர் படர்க்கைப் பெயர்வகை.
பொ:
மூவிடப் பெயர் வகையுள் தன்மையில் யான், நான் ஒருமையும்;
யாம், யாங்கள் நாம், நாங்கள் பன்மையும்;
நீ முன்னிலை ஒருமையும், நீர்
நீங்கள் முன்னிலைப் பன்மையும், வினா சுட்டு அடியாகத் தோன்றிய
பெயர்கள், தனிப்பெயர்கள், பிறவகைப் பெயர்கள் படர்க்கையும் ஆகும்.
நீ + இர் என்பது நீவிர், நீயிர் என்றுருப்பெற்று இலக்கிய வழக்கும்
பெற்று நீர் என்று இன்று
நிற்றலின் விடுத்தேம். எனினும் நீர் என்பது
மதிப்பொருமை சுட்டுதல் நோக்கி அவ்விரண்டையும்
முன்னிலைப்
பன்மையில் கொளலாம்.
சா:
படர்க்கைக்காட்டு:
அவன்; எவள் - சுட்டு வினாவடிப் பெயர்.
வழுதி; தென்னை - தனிப் பெயர்.
வழக்கறிஞர்; ஆர்வலர் முதலியன பிறபெயர்.
அவணர் (அவ்விடத்தர் - குறுந்தொகை) போல்வனவும் பிறபெயருள் அடங்கும். இவை பெயரடிப் பெயர்கள்.
53. நூ: கதையினும் பாட்டினும் ஒருவழிப் பேச்சினும்
திணைபால் தெரியாத்தன்மைமுன் னிலைப் பெயர்
எல்லாம் தான், தாம் என்பவும் பிறவும்
பொதுப்பட வருதலின் பொதுப் பெயர் எனலாம்.
|