பொ:
கதைப்பாட்டு ஒரு சார்ப்பேச்சு இவற்றில் திணைபால் தெரியாத
தன்மை முன்னிலைப் பெயர்களும்,
எல்லாம் தான், தாம் என்பனவும்
பிறபெயர்களும் பொதுப்பட வருவதால் பொதுப்பெயர் எனப்படலாம்.
(பிறவும் என்பதனான் மணி என நாய்க்குப் பெயரிட்டழைக்கும் மாந்தப்
பெயர் பண்டைப்போல்
விரவுப் பெயராதலும், கொள்க.)
வி:
பேசும் வலியுடை மாந்தர் முன்னிலை இடப்பெயர்களை
அஃறிணைப் பொருள் மேலிட்டுக் கூறுதல் இலக்கியமரபாகலின்
(301)
முன்னிலையை இருதிணைப் பொதுவாகவும்; அவைதாம் உரையாடாமையின்
தன்மையை உயர்திணையாகவும்
தொல்காப்பியம் வகுத்தது. ஆயின்
கற்பனை இலக்கியங்களில் அஃறிணைப் பொருள்கள் உரையாடுவது
உளதாகலின் நன்னூல் தன்மையையும் இருதிணைப் பொதுவாகக் கூறியது
பொருந்தும். இப்பொதுமை, வழக்கில்
உளதோ எனின் ஆவலோடு
வளர்க்கும் ஆமாட்டை இல்லிலும் வண்டிக்காரர் மாட்டை அதட்டுகையிலும்
முன்னிலைப் பெயர்களும், கிளி, கணிகப்பொறி (கம்யூட்டர்) முதலவற்றிற்குப்
பயிற்றின் தன்மைப்
பெயர்களும் பொதுவாமன்றோ?
அவர் எல்லாம் வந்தனர்; அவையெல்லாம் வந்தன; அவன் தான்,
அவள் தான், அவர் தாம், அவர்கள்
தாம், அவை தாம் வேண்டும். பிறவும்
என்பதனால் மாணிக்கம், தமிழ்மணி, திலகம், போல்வன
ஆண் பெண்
இருபாற்கும் ஆகிவருதல் போல் வனவும் கொள்க. தான், தாம் என்பனவே
தொன்மையில்
படர்க்கைப் பெயராய் இருந்து, இடையில் பொதுவாயின
என்னும் (மோ. இசரயேல்) கருத்துப்
பொருந்துவதே (தமிழ்ப்பொழில் து 45,
ம-4)
54. நூ: எண்பகாப் பொருட்பெயர் வினையால் தெளிவுறும்.
பொ:
எண் பிரித்துக்காட்டாமல் இயலும் அஃறிணைப் பொருட்களின்
பொதுமை வினை கொண்டு தெரியப்படும்.
சா:
மாடு வந்தன. நூறு நூல் விற்றன.
55. நூ: செயலுறு நேர எல்லையைச் சுட்டும்
நிகழ் விறப் பெதிர்வெனக் காலம் மூன்றே
பொ:
ஒரு செயல் உற்றகால அளவை எல்லையிட்டுக் காட்டுகின்ற
நிகழ்காலம் இறந்த காலம், எதிர்காலம்
எனக் காலம் மூன்று வகையாகும்.
சா:
உண்டான் - உண்கிறான் - உண்பான். உண்பதில் உணவை
வாயிலிடுமுன் எதிர்வும், இடுங்கால் - நிகழ்வும்,
இட்ட பின் இறப்பும் ஆய்
முடியுமேனும் உண்ண அமர்ந்ததிலிருந்து எழுந்துகைகழுவும் வரைப்பட்ட
காலப்
பிரிவு செய்து காட்டும் சொற்கள் என்பதைக் குறிக்கும் நேர எல்லை
என்பது.
|