பக்கம் எண் :
 
56

56. நூ: நடைமுறைத் தமிழில் காலங்குறிக்கும்
       துணைவினைச் சொற்கள் தோன்றியவாறே
       தனிப் பொதுக்காலம் மூன்றும் தம்மொடு
       தனித்தனிக் கூடமேலும் ஒன்பதாம்.

    பொ: இற்றை வழக்குத் தமிழில் காலத்தைக் குறிக்கும் இரு, கொண்டு
என்னும் துணை வினைச் சொற்கள் அடைவுபட்டிருக்கும் முறையானே
இறப்பு, நிகழ்வு, எதிர்வென்னும் தனித்துப் பொதுவிற் சுட்டும் மூன்று
காலங்களை ஒன்றொடொன்றைப் பிணைத்தால் மேலும் காலப்பிரிவு
ஒன்பதாகும்.

   

சா: இறப்பு = செய்தேன்
  இறப்பிறப்பு = செய்திருந்தேன்
  இறப்பு நிகழ்வு = செய்து கொண்டிருந்தேன்
  இறப்பெதிர்வு = செய்திருப்பேன்
  நிகழ்வு = செய்கிறேன்
  நிகழ்விறப்பு = செய்திருக்கிறேன்
  நிகழ்நிகழ்வு = செய்து கொண்டிருக்கிறேன்
  நிகழ்வெதிர்வு = செய்ய இருக்கிறேன்
  எதிர்வு = செய்வேன்
  எதிர்விறப்பு = செய்திருப்பேன்
  எதிர்நிகழ்வு = செய்து கொண்டிருப்பேன்
  எதிர்வெதிர்வு = (செய்ய இருப்பேன்).

    இடு என்னும் துணைவினை சில விடத்துப் பொருந்தும்.  எதிர்
வெதிர்வு போல்வன வழக்குறல் இன்றேனும் தெளிவுபற்றிக் கூறப்பட்டது. 
பரிதிமாற் கலைஞரும் எதிர்வுப் பிரிவுகள் பெருவழக்கு அல்லனவாதல்
பற்றிக் கூறாது விடுத்தார்.

பெயர்ச் சொல்

57. நூ: உலகப் பொருள்களைப் பிரித்தறி யும்படிப்
       பெயர்த்துக் குறிபெய்துரைத்தல் பெயரே.

    பொ: உலகத்துள்ள பொருள்களையெல்லாம் பிறவற்றினின்றும்
பிரித்தறியும் வகையில் பெயர்த்து அதனை அறிகுறியாய் ஒருகுறியீடிட்டு
வழங்குவது பெயர்ச் சொல்லாம்.

    சா: மலை + மல் - ஐ வலிமையானது.  பிற வலிதாய பொருளினும்
மிக்கது ஆதலின் பெயராயிற்று.  (கண்டாரை மலை