உயிர் பெருக்கிய உயிர்மெய் இருநூற்றுப்பதினாறும் ஆகிய 247
எழுத்துகளே தமிழ் மொழியின் எழுத்துவகை
என்பது.
தமிழர்கடனுணர்த்த உயிர்நேர் என்றும் மொழிக்குழுத் தனிச்சிறப்பு
நோக்கி ஒப்பில் என்றும்
தமிழுக்கு அடை கூறப்பட்டன.
4. நூ: உயிரும் மெய்யுமே அடிப்படை எழுத்துகள்
அடிப்படை எழுத்துகளாவது முதலெழுத்துகள்.
வி:
இவை இரண்டும் முதலெனவே பிறவிரண்டும்சார்பெழுத்து என்னும்
பழைய பெயர்க்குரியன வாதலும் சார்பெனப்படும்
பிற எண்வகை
எழுத்துகளை இங்கு எடுத்தியம்பாமையும் இந்நூல் இறுதியில் காண்க.
இதனான் தமிழ்
மொழியின் எழுத்து வரம்பு முப்பது என்றே உரைத்தல்
வேண்டும் என்க. (உயிர்த்தலுடைய உயிர்
எழுத்திற்கு ஒற்றுதல் உடைய
ஒற்றெழுத்து என்னும் பழம் பெயர் மாறி, மெய்யெழுத்துகள் உடல்போல்வன
என்னும் பொருளில் பின்பெற்ற பெயரே.)
5. நூ: உயிரே,
அ, இ, உ, எ, ஒ என்றைந்தாம் குறிலும்,
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒளவென்
றாமேழ் நெடிலும் கூறாய் உடைத்தே.
உரைமுடிவு: உயிரே குறிலும் நெடிலும் கூறாய் உடைத்து என்பது சொல்
முடிவு.
6. நூ: மெய்யே,
வல்லென் ஓசை கசட தபற
மல்லென் ஓசை ஙஞணநமன
வல்லினத்திற்கும் உயிர்க்கும் இடையொலி
யரல வழள எனமூ வினமாம்.
பொருள் வெளிப்படை
வி:
வல்லினத்திற்கும் மெல்லினத்திற்கும் இடைப்பட்ட ஒலியுடையன
இடையினம் என்னும் இலக்கண உரையாசிரியர்கள்
கருத்தை மறுத்து,
வலிக்கும் உயிர்க்கும் இடைப்படுவதே என்னும்
மொழியியல்
கருத்து மேற்கொளப்பட்டது,
பதினெண் மெய்வரிசைப் பதிவால் எழுத்துத்தெளிவு
உண்டாதலின் நிரல் முறையில் பயில்விக்க
கங சஞ டண தந
பம றன யரல வழள
|