பக்கம் எண் :
 

    சா: பாடினான்: முற்று; பாடி; பாடிய - எச்சம்
    பாடுதல்: பாடல்; தொழிற்பெயர்.

62. நூ: செய்வதோர் வினையால் அப்போதணைவது
       விணையால் அணையும் பெயரெனப் படுமே.

    பொ: இயற்பெயர் வேறொன்றுடையார் ஒருவினை செய்யுங்கால்
அப்போது புதிதாக நிலையில்லாமல் வினையடியாகச் சார்ந்து குறிப்பது
வினையால் அணையும் பெயராம்.

    சா: ‘புருடோத்தமனும் மனோன்மணியும் எதிரெதிர் நோக்கித் தம்
கனவில் கண்டவளும் வந்தவனும் இவரே என உணர்ந்தனர்’ என்புழிக்
‘கண்டவள், வந்தவன்’ புதிதாய் நிலைப்பில்லாததாய் அமைதல் காண்க.

63. நூ: பெயரியல் பாயுருபேற்றலும் காலம்
       வினையியல்போடு காட்டலும் இதற்குள.

    பொ: பெயரின் இயல்பாய் உருபேற்றலும் வினையின் இயல்போடு
காலங்காட்டலும் வினையாலணையும் பெயர்க்குண்டு.

    சா: நடந்தானை ஏத்தாத நாவென்னநாவே!
        நாராயணா வென்னா நாவென்னநாவே!       

(சிலம்பு)

    நீந்துகிறவன்; தந்தவன்; காண்பவன் என வழக்காற்று

வினையாலணையும் பெயர் பெரிதும் நீந்துகிற + அவன் எனப்பிரிப்பது
போல் அமைந்திருத்தல் கருதத்தக்கது.

64. நூ: அறுவகைப் பெயர்கள் இடனி உவமையுள்
       ஒன்றன் பெயரால் அதனோடியைந்தமற்
       றொன்றை உணர்த்தல் ஆகுபெயரே.

    பொ: அறுவகைப் பெயர்களும், இடம்படுபொருட் பெயரும்
உவமைப்பெயரும் ஆயவற்றில் ஒன்றன் பெயரால் அதனோடு தொடர்புடைய
மற்றொன்றைச் சுட்டி உணர்த்துவது ஆகுபெயராகும்.

   

பொருள் : (ஆட்டுக்காலைச்சுட்டி) இது இரண்டரையாடு எனல்.
காலம் : 2இல் போகின்றேன்.  (பேருந்து)
இடம் : தலை வெட்டிவா.
சினை : தாடி வந்தார்.
பண்பு : அழுக்கு எடுக்க வெளுப்பார் வந்தார்.
தொழில் : பாய்ச்சல் விழுந்த சுண்டல்.
இடனி : விளக்குமார் இங்கே வா.