பொ:
மூன்றாம் வேற்றுமை உருபுகள் ஒடு, ஓடு, உடனே இவை
கூட்டும் பொருள் உடனிகழ்தல்; இவற்றோடு
மேலும் ஆன், ஆல்
உருபுகளையும் அவற்றின் கருவிப் பொருளையும் முன்னோடு
வேறுபட்டதாயினும் இணைத்துக்
கூறுவர்.
சா:
உடம்பொடு உயிரிடை நட்பு. ஒடு என்பதன் நீட்சித் திரியே ஓடு;
ஆவலோடு வந்தான்; அன்பால்
உலகத்தை ஆளலாம்; ஆன் என்பதன்
திரிபாயினும் ஆல் பெருவழக்குற்றதே ‘பெருவுடையர் கோயில்
இராசராசனால்
கட்டப்பட்டது-என்னும் செயப்பாட்டு வினை முதலாக வருவது
தொடராக்கத்தமையும். ஆடை நெய்தான்
என் புழி நூல் முதற்கருவியாகவும்
தறி துணைக்கருவியாகவும் கூறும் பழம் பிரிவு குறிக்கொள்ளத்தக்கது.
விரி: ஆன், ஆல் இவற்றிற்குரிய வேற்றுமை வேறொன்றாகக்
கருதத்தகும் அளவு தனிப்பட்டமை நூற்பாவின்
நோக்கு. மற்று ஆன் -
ஆல்திரிபு புணர்ச்சிப்பிரிப்புப் பிறழ்வாலும், ஒடு-ஓடு நீட்சி உயிர்முன்
வரவாலும் (அரனானடக்கிறோம் இன்-இல் இஃதே) (அறிதொறறியாமை;
தொறு - தோறு போலும்) அமைந்தவாகலாம்.
74. நூ: நான்காம் வேற்றுமை உருபுகு - கொடைப்பொருள்
பொ:
இதனை விரிவுபடுத்திப் - பகை, நட்பு, தகுதி முதற்கருவியாதல்,
பொருட்டு (முறை) எல்லை முதலவாய்க்
கூறுவர்.
சா:
குமணன் பெருந்தலைச் சாத்தற்கு வாள் கொடுத்தான். அவன்
கதையுள் பிறவற்றைப் பொருத்துக.
எனக்கு மகன் என்று கூறலன்றி
உயர்திணைப் பெயர்கள் முன் அது உருபு பயன்படுத்தலாகாதென்னும்
பழைய
விதி. என் மகன் வந்தான் எனத் தொடரை
விரிக்குங்காலைப் பிழைத்தும், பெருவழக்கில் தழைத்தும்
நிற்றலின்
அவ்விதி செல்லாதாயிற்று.
75. நூ: ஐந்தன் உருபே இன் இல் என்பர்
நீங்கல் பொருள்தர நிகழும் போதில்
நின்றுஇருந் தென்பன நிரலே இணையும்.
பா: ஐந்தாம் வேற்றுமை உருபு இன், இல் என்னும் இரண்டாம். அது
தனக்குரிய நீங்கற்
பொருளைத்தரும் பொழுதில் இன்னோடு நின்று
என்பதும், இல்லொடு இருந்து என்பதும் இணைந்து நிற்கும்.
சா:
மலையினின்று விழும் அருவி,
நாளையிலிருந்து நல்ல காலம்.
விரி: திருவாரூரின் மேற்கு
தஞ்சாவூர் என்று எல்லையும்; கல்வியின்
பெரியன் கம்பன் என்று ஏதுவும், திருவாரூரினுக்கு மேற்கு
|