பக்கம் எண் :
 
தஞ

    தஞ்சாவூர் என்றும், கல்வியினால் பெரியன் கம்பன் என்றும் பெரிதும்
சாரியைத் தன்மையின் நிற்றலின் தனித்தனி வலியுறுத்தாது விடுத்தாம். 
காக்கையிற் கரிது களம்பழம் என்பது ஒப்பெனினும் உறழ்வாதலும்
ஒப்புப்பொருள் இதற்கு இற்றை வழக்கின்மையும் அறிக.

    மின்னின் மிக்கது அணுவாற்றல் என்புழிக்காணும் உறழ்வும்
ஒன்றினொன்றை நீக்கி உரைத்தலின் நீங்கற் பொருளாம்.  இன் இங்குத்
தனித்து வருவது சிறுபான்மை என்பதொடும் ‘மின்னினும் மிக்கது’ என்று
அக்காலும் உம்மை சேர்த்து வழங்குவதே பெருவழக்காகலின் இன் தனித்து
வாராது என்றாம்.

    மெய்ம்மையில் இன், இல் என்பன ஒரு தனி வேற்றுமை அல்ல
என்னும் (மொழி நூல் மு.வ.) மொழியியல் கருத்து எண்ணத்தக்கது.

76. நூ: ஆறன் உடைமை உருபு அது, உடைய

    பொ: ஆறாம் வேற்றுமைப் பொருள் உடைமை; அது, உடைய என்பன
உருபு.

    சா: உடைமை, எனதுகை, என்னுடையபை,
எனப்பொருளோடொட்டியதற்கிழமையும்,  அயலாயபிறிதின் கிழமையும் ஆம்.

        உறுப்பு, பண்பு, தொகுதி, திரிபு முதலன - தற்கிழமை
        பொருள், இடம், காலம் - பிறிதின்கிழமை

    அதுஉருபு துவ்வெனிறுதி உடைமையின் உயர்திணை வரலாகாதென்னும்
பழைய விதிக்கட்டுப் பாட்டான் இறுதிநிலையில்லா உடைய என்பது
தோன்றிற்றுப் போலும்.

77. நூ: ஏழாம் வேற்றுமை இடப்பொருள், உருபுகள்
       தனிஇல், கண், இடம், பால் முதல் இடக்குறி.

    பொ: ஏழாம் வேற்றுமைக்குப் பொருள் இடங்குறித்தலாம்.  அதன்
உருபுகள் தனித்துவரும் இல், கண், இடம், பால் முதலிய இடக்குறியீடுகள்.

    சா: பாவேந்தர் பாட்டில் தமிழ் மணக்கும் இருந்து என்னும்
பின்னிணைப் பொடுவரும் - ஐந்தன் உருபினின்று அகற்றுவதற்குத் தனி இல்
எனப்பிரிப்படை தரப்பட்டது.  இடம் என்பதே அத்துச்சாரியை
பெற்றுவரலுமாம்.  பால் - புதுவது புகுதல்.  தென்பால், என்பால் (திருமுகப்
பாசுரம்) மேல், கீழ், இடம், வலம், முன், பின், போல்வன இடக்கூறு நோக்கி
வருவன.