78. நூ: சில தனிச் சொல்லும் உருபாம் திறமே.
பொ:
சில தனிச் சொற்களும் உருபெனும் திறம்படும்.
(இன்)
சா:
(2) சிவனைவிட முழுமுதற் கடவுட்டன்மை ஏற்றப்பட்ட
(ஆல்)
கடவுள் பிறர் இல்லை (நீக்கல்) (3) வாள் கொண்டு வெட்டினான்;
(ஓடு) (கு)
அவன் கூட நீயும்போ. (4) சுவை பொருட்டு (ஆக)த் தமிழ் பயில்வார்
உடனே, நின்று, இருந்து,
உடைய இடத்து என்பன சொல்லுருபுகளே;
எனினும் அவற்றின் பெருவழக்குப்பற்றி நூற்பாவாயின.
79. நூ: எட்டன் உருபே இயற்பெயர் ஈற்றின்
திரிபு, குன்றல், மிகுதல், இயல்பு-அயல்
திரிபும் ஆம்; பொருள் படர்க்கையோரைத்
தன்முகமாகத் தானழைப் பதுவே.
பொ:
எட்டாம் வேற்றுமை உருபுகளாவன; விளியடைந்த பெயரீற்றின்
திரிதலும், கெடுதலும், மிகுதலும், இயல்பாதலும்,
ஈற்றயல் எழுத்துத்
திரிதலுமாகும். அவற்றின் பொருள், படர்க்கைப் பெயர்ப் பொருளைத்
தனக்கெதிர்முகமாக
அழைப்பதால் ஆகிய விளிக்கப்படு பொருளாம்.
சா:
இது ‘முன்னோர் மொழியும் பொன்னேபோல் போற்றல்’ மாதராள்
- மாதராய்; (அழகன்) - அழக;
அழகனே; அழகன்; அழகா - என்பன
எடுத்துக்காட்டு.
இப்பொது விதியைத் விரித்துக்கூறின் பெருகுமாகலின் பயிற்சிக்குப்
பண்டை இலக்கியமும், இலக்கணமும்
அடியாகுக என விடுத்தாம். (எனினும்
பொதுவில் உயர்திணை முப்பால் இறுதிகள் யவ்வாய்த் திரிதலும்,
ஓ, ஏ, ஆ
பெறலும் இறுதிகெடலும், ஈற்றிலும் ஈற்றியலிலும் உயிர்க்குறில் நீளலும் ஐ
இறுதி ஆய்
ஆதலும் பொது மாற்றங்களாம்).
80. நூ: வினாச்சுட் டடியாம் படர்க்கைப் பெயர்கள்
ஈரிடம் தாம்தான் பிறமேல் விளியா.
பொ:
வினாச்சுட்டடியாகத் தோன்றும் படர்க்கைப் பெயர்களும் பிற
இரண்டிடப் பெயராம் தன்மை முன்னிலையும்,
தாம், தான் என்னும் பொதுப்
பெயரும் பிற மேலமையும் ஐம்பால் இறுதியும் விளிக்கப்படா.
|