92. நூ: தன்மைப் பன்மை என்பது தன்னொடு
முன்னிலையாதல் படர்க்கையாதல்
கூட்டியுரைக்கும் கூட்டக்குறியே.
பொ:
தன்மையில் பன்மையென்பது தன்னொடு முன்னிலை யாரையோ படர்க்கையாரையோ சேர்த்துக்குழுப்படுத்தி
உரைப்பதே.
சா:
யாம்-தன்மைப்படர்க்கை; நாம்-தன்மை முன்னிலை. இரண்டினும் கள்சேரினும் இவ்வுணர்ச்சிப் படாமைகாண்க.
இவையிரண்டும் இன்று மதிப்பொருமை பற்றியே நடத்தல் இயல்பு. எனவே பிறதன்மைப் பன்மைகளைப்
பொருளறிந்தாள்க.
93. நூ: கு, டு, து, று இறுதி தன்மை ஒருமையும்
உம்மூர் அவையே பன்மையும் பழமை
பொ:
குடு துறு இறுதி தன்மை ஒருமை சுட்டலும், கும், டும், தும், றும் என உம் ஊர்ந்த அவையே தன்மைப் பன்மையைச்
சுட்டலும் பழமைப் பாங்கின.
சான்று பண்டை நூலில் கண்டுகொள்க.
94. நூ: ஆய்ஐ இறுதியும் செய்யின் நிழலாம்
ஏவலும் பிறவும் முன்னிலை ஒருமை
(இயென் இறுதி பழமை வழக்கே).
பொ:
ஐ, ஆய் என்னும் இறுதியும் செய் என்னும் வாய்பாட்டு ஏவலும்
பிறவும் முன்னிலை ஒருமை. இகர இறுதி
ஒருமைக்காதல் பழமை வழக்கு.
சா:
உண்டாய், உண்டனை, உண், உண்டி. வாய்பாடாவது செய்
என்னும் சொல்லொத்தொலிப்பன.
செய்-கொய், பெய் என இறுதி ஒத்தலின்றி
முழுதொத்திசைப்பனவே பெரும்பால்; சொல் கொள்; உண்;
தின்; நட, படி,
பார், வாழ், வை, போ, வா முதலியன. மற்று, செய்-செய்த-செய்கின்ற,
செய்யும்,
செய்து, செய்ய செயின் என மாறினால்-அக்கால் செல்-சென்ற,
செல்கின்ற, செல்லும், சென்று, செல,
செலின் என நிழல் போல்
ஒத்தொலிக்கும் அனைத்துச் சொல்லையும் சுருங்கக்குறிப்பது.
95. நூ: உம்மென் இறுதி உயர்வொருமைக்கே;
கள் பின் இணைந்து பன்மையாம் முன்னிலை.
பொ:
உம் மென்னும் இறுதி உயர்வொருமை முன்னிலையாம்;
அதன்பின் கள் இணைந்து முன்னிலைப்பன்மையாக்கும்.
|