பக்கம் எண் :
 

டாய்ச்சுருங்கியது பழையன கழிதல்.  அம்மாதரும்; அண்ணன்அடிக்கும் என
வருவதைப்பழமைப் பாங்கெனக்கொளின் அக்கா வருகிறது; நம்பி இருக்கிறது
என்னும் துவ்விறுதி அஃறிணையும் ஏறலின் பிழையே.

103. நூ: யார் எனும் வினாவுயர்திணைமுப் பாற்பொது.

    பொ: யார் என்னும் வினா உயர்திணை முப்பாற்கும் பொதுவாய் வரும்.

    சா: அவன் யார்?  அவள் யார்?  அவர்கள் யார்?

104. நூ: என்னை அஃறிணை இருபால் வினாவும்

    சா: அது என்னை?  அவை என்னை?

    இக்கால் என்னை என்பதனை என்ன எனத்திரித்து வழங்குகிறோம். ஐ
சாரியை பெறும்  என் என்பது எவன் என்பதன் திரிபாகலாம்: சிறைகாக்கும்
காப்பு எவன் செய்யும்.

105. நூ: வினைமுற் றெச்சப் பொருளும் படுமே.

    பொ: வினைமுற்று வினையெச்சப் பெயரெச்சப் பொருள்படுவதும்
உண்டு.

    சா: முகந்தனர் கொடுப்ப--முகந்து கொடுப்ப என
வினையெச்சமாயிற்று.  தேரான் பிறனில் புகல்-தேரானாகிய பிறன்
எனப்பெயரெச்சப்பொருள்படல் காண்க.  (இதற்குப் பன்மை ஒருமை
வழுவமைதி காட்டல் ஒருவகை) முற்று உருமாறாது எச்சப்பொருள்பட்டது.

106.  நூ: குறை வினையோடு காலம் காட்டிப்
        பிறநான் கறியப் பிறிதொருவினையை
        நாடி நிற்பது வினையெச்சம்மே.

    பொ: முற்றுவினை போல ஐந்தொகை காட்டாது வினை
முதனிலையோடு காலங்காட்டிப் பிறநான்கினையும் காட்டவேண்டி மற்றொரு
முற்றுவினையை நாடிநிற்பது வினையெச்சமாம்.

    சா: மு: கொடுத்தான்: வினை. எ. கொடுத்து.

    கொடுத்து என்பதில் திணை, பால், எண், இடம் இன்றி வினையும்
காலமுங் மட்டே இருப்பது காண்க. முற்றுவினையை நாடி என்னாது
வெறுமே வினை என்றது, கொடுத்து முடித்துப்போயினான் என்புழி கொடுத்து
என்பது முடித்து என்னும் வினையைத்தழுவி அவ்வெச்சம் பொருள் முற்றப்
போயினான் என்னும் வினைமுற்றைத்தழுவலும் ஆம் என்றற்கே.