சா:
முன்னூலாசிரியர் போன்றே ஆய்தம் வரும் இடம்மட்டில்
கூறப்பட்டது.
எஃகு, அஃகம், பஃது, வெஃகாமை. கஃசு (கஃசா உணக்கின் - குறள்.)
சுஃறு, கஃறு முதலிய தனிச்சொற்களும்,
அஃது, இஃது, எஃது, அஃகடிய,
இஃகடிய, (உஃகடிய,) எஃகடிய முஃடீது,, கஃறீது, அஃகான் முதலிய
புணர்ச்சித்
திரிபுகளும் பொருள் தெளிவுடை ஆய்தம் பயில் சொற்கள்.
வி:
ஆய்தத்தின் முழுப்பயன் ஆய்வில் இருப்பினும் அஃது பிறமொழி ஒலி பெயர்ப்புக்குப் பயன்படுவதை
ஒழிபியலிற் கண்டு கொள்க.
ஆய்தம் என்பது (தொல். 324) நுணுக்க வொலியெழுத்து என்னும்
பொருளுடைத்தாம்.
அஃதை - அகுதை என்பதனால் ஆய்தம் ககரப் போன்மை ஒலி
பெறுகுவதறிக. அஃகேனம் எனச் சாரியை பெறுங்கால்
இடையில் ககரம்
தோன்றுவதுமிதனான் என்க.
10. நூ: உயிர்மெய் என்பது மெய்யும் உயிரும்
பொருந்தி அமைந்த உருவமாகும்.
பொ:
மெய்யெழுத்தொன்றும் உயிர்எழுத்தொன்றும் தம்முள்
முறைப்படப் பொருந்தி அமைந்த வடிவே உயிர்மெய்எனும்
எழுத்து.
வி:
ககரவரிசையைப் பிரிப்பின் க்-மெய்யொடு அகரமுதல் உயிர்
பன்னிரண்டும் புணர்ந்து தோன்றியமை
தெளிவாம்; இவ்வாறே பிறவும்.
இதனுள் இக்கால் வழக்கில்உள்ளாங்கு உயிர்மெயை ஒன்றென நோக்குதல்
இன்றி - மெய்யறிஞர் பார்வைபட உயிர்-மெய் எனப்பிரித்து நோக்கல்
இலக்கணப் பாங்கு எனல்.
(12x18=216) உயிரும் மெய்யும் பெருக்கி 216 ஆய்ப் பட்டியலிடுதல்
வாய்பாடு முறையில்
பொருந்துமேனும் அனைத்து உயிர்மெய்யெழுத்தும்
மொழிப் பயனின்மையின் முழுமையும் பொருந்தாது. மெய்யுயிர்
என
எழுத்துகள் சேரும் முறையினே பெயரமையாது மாறியமைந்தது நகர்ப்புறம்
(புறநகர்) என்னும் தொகை
இடமாறி அமைவதால் நிலைப் பெயராவதுபோல்
ஒரு பெயரமைவு முறை என்க.
11. நூ: உயிர்மெயை ஆக்கவும்பிரிக்கவும் இகர
உயிரை முன்வைத்துத் தழுந்த ஒலித்தலே.
பொ:
உயிர்மெயை உண்டாக்கவும் துண்டாக்கவும் ‘இ’ என்னும் உயிரை
முன்வைத்து அவ்வுயிர்மெயின் மெய்
இரட்டிக்குமாறு அழுத்தி ஒலிக்க
வேண்டும்.
|