சா: |
க்+அ |
> |
இக்+அ |
< |
இக்கு+அ |
> |
இக்க+ |
> |
க-சேர்த்தல். |
|
க |
> |
இக |
> |
இக்க |
> |
இக்கு+அ |
> |
க்+அ-பிரித்தல். |
வி :
இம்முறை நேரிதன்றேனும் இளையர்க்குத் தந்ததோர்
எளியமுறை. பிரிக்கக் காணும் உயிர்மெய்யின்
ஈற்று மெய்யையும்
அவ்வெண்ணிக்கை உயிரையும் அடங்கியதாய்க் கூறுவதினும் இஃது எளிதும்
ஒலிச்சார்பும்
ஆதல் அறிக.
12. நூ: மாத்திரை என்பது எழுத்தொலி அளபு;
மணிப்பொறி நொடியொன்(று) ஓரொலி அளவே;
பொ:
மாத்திரை என்று இலக்கண நூல்களிற் காணப்படுவது எழுத்தை
ஒலிக்கும் நேர அளவே. மணிப்பொறியின்
ஒருநொடி ஓரளபு ஆகும்.
மாத்திரை என்னும் எழுத்தோசைக் கணக்கீட்டிற்குப் பண்டைப் பெயர்
அளபு என்பதே (தொல். 3,
4, 5, 6,) ஓரளபிற்கு முன்னூலாசிரியர்
கண்ணிமை, கைந்தொடி கூறுவர்.
13. நூ: அதுவே,
குறிலுக்கொன்று; நெடிலுக்கிரண்டு
மெய்க்கும் ஆய்தத் திற்கும் அரையே.
அ 1; க-1 ஆ 2; கா-2 ஃ; க்-.
வி:
குறில் நெடில் என்றது உயிரையும் உயிர்மெய்யையும்
உட்படுத்தும். ‘அ’ உயிர்க்குறில் ஒன்றும்
‘க்’ மெய் அரையும்
கலக்கும்போது ‘க’ என்பது ஒன்றரை அன்றே பெறல் வேண்டுமெனின்-
(பின்னுரையாசிரியர், இச்சிக்கலுக்குக் காட்டும் உவமை ‘அப்பொடு
புணர்ந்த உப்பேபோலும்
‘என்பது); சூலுற்றமகளிரை ஒரு மகளாய்
எண்ணுவது போலக் கொள்க.
உறவு என்பதை ஒலித்துணர்க. தென்புற மாவட்டங்களில் சொற்களை
நீளொலிப்படுத்திக் கூறுவது இந்த
அளவு கடத்தலே.
14. நூ: உட்காற் றெழுந்து தொண்டை மூக்கினில்
உட்கார்ந் தெழுந்திட ஒலி மடல், நா, பல்
வாயிதழ் அண்ணம் இவற்றியக் கத்தால்
மேவிடும் மொழியின் எழுத்து வரிசை.
நூ:
இது முதல் எட்டு நூற்பாக்கள் இயைபொலித் தமிழெழுத்துப்
பிறப்புக் கூறுகின்றன.
|