பொ:
நுரையீரலின் உள்ளிருந்தெழும் காற்று, தொண்டை, மூக்கு
என்றிவ்விடங்களில் உட்கிப் பொருந்தி
எழ, ஒலிமடல், நாக்கு, பல், வாயின்
இரண்டிதழ்கள், அண்ணம் இவற்றின் முயற்சியால் தமிழ்
மொழியின்
எழுத்துகள் வரிசையுறத் தோன்றிடும்.
வி:
தமிழ் எழுத்துகள் ஒவ்வொன்றும் பிறக்கும் முறையினைத்
தொன்னூலாசிரியர் செவ்வையுறக் கூறினரேனும்,
பள்ளி, வீடு, சுற்றுப்புறம் ஆகிய இடத்துப் புழங்கும் எழுத்தொலியே இளஞ்சிறார் நெஞ்சைக் கவ்வி
வாயிற்படிவது எனவே; பள்ளிப்பயிற்சியிலும், குழந்தை வளர்ப்பு முறையினும்
ஆசிரியர், பெற்றோர்
கருத்துக் கொண்டு பயிற்றுக. முன்னூல்களில் கூறிய
நெஞ்சு, தலை விடுபாடும் மிடற்றுத் தசை நாண்
ஆகிய ஒலிமடல்
(Vocallips)
புத்திணைப்பும் மொழிநூல் ஆய்வுக்கொப்ப அமைக்கப்பட்டன.
15. நூ: உணலியல் பேபோல் குரலொலி இயல்பும்
உணரியல் பாற்பிற எழுத்துகள் நடப்ப
ஒப்பொலி யுடையன பிறப்பினைச் செப்புவாம்.
பொ:
உண்பது வாய்க்கு இயல்பாதல் போல் குரலெடுத்து ஒலிக்கின்ற
இயல்பு நிகழ்ச்சியைச் செவியுற்று
ஓர்ந்து கொளலான் பிறஎழுத்துகள்
நடப்பதறிய, தமிழில் ஒத்த ஒலியுடைமையான் குழுப்பமுறும் ன, ண,
ந; ல,
ள, ழ; ர, ற - எழுத்துக்களின் பிறப்பினைமட்டும் கூறுவாம்.
வி:
உண்பதும் ஒலிப்பதும் வாய்க்கியல் பாதலைக் குழந்தைப் பண்பால்
உணர்க. எழுத்தொலிப் பிறப்பைச்
செவியோர்ந்து கொள்வதே தகுமன்றி
நூற்பார்த்துச் செய்வது செயற்கையாம் என முற்றும் விடற்க.
பயிற்றப்
புகுவார் அனைவரும், ஐயம் எழுங்கால் எடுத்தேற்றுப் பார்த்தல் நன்றாம்.
சமையற்
கலைநூல் செய்முறைப்படல் போலும் இச்செய்கைக்கு முன்னூல்
விரிவைக் கண்டறிக.
அ) அஆஆயிரண் டங்காந் தியலும் (தொல்)
ஆ) இஈ எஏ ஐ அங் காப்போ(டு)
அண்பல் முதல்நா விளிம்புற வருமே.
இ) உஊ ஒஓ ஒளவென இசைக்கும்
அப்பால் ஐந்தும் இதழ் குவிந்தியலும்.
ஈ) ககார ஙகாரம் முதல்நா அண்ணம்
உ) சகார ஞகாரம் இடைநா அண்ணம்
ஊ) டகார ணகாரம் நுனிநா அண்ணம்.
எ) அண்ணம் நண்ணிய பல்முதல் மருங்கின்
நாநுனி பரந்து மெய்யுற ஒற்றத்
தாமினிது பிறக்கும் தகார நகாரம்
ஏ) இதழியைந்து பிறக்கும் பகார மகாரம்
ஐ) பல்லிதழ் இயைய வகாரம் பிறக்கும்.
ஒ) அண்ணஞ் சேர்ந்த மிடற்றெழு வளியிசை
கண்ணுற் றடைய யகாரம் பிறக்கும்
ஓ) ஆய்தக் கிடந்தலை. அங்கா முயற்சி(நன்)
|