பக்கம் எண் :
 
இங

இங்கு ஓரொலி போல் தோன்றும் பன்மை எழுத்தொலிப் பான்மை அறிதல்
வேண்டி அவற்றின் பிறப்பு மட்டில் கூறப்படுகிறது.

16. நூ: வாயுள் மேற்புறம் வழுவழுப் பூடுமுன்
       பாலுறு பற்செவ் வரந்தை அண்ணம்

    பொ: வாயின் உட்புற மேற்பால் திகழும் வழுவழுப்பான செஞ்செவே
பகுதியை ஊடறுத்தாங்கு மேற்புற வரிசைப்பல் ஒட்டி அமைந்த
சொரசொரப்பான வரந்தையே அண்ணம் ஆகும்.  இதை முன்னூல்கள்
[பிறப்புப் பிரிவில்மிகக்கூறும்.  (‘அண்ணம்’ என்ற சொல்லை அந்நூற்
பயிலப் புகுவார்க்கு இன்னதென விளக்கியது.)

17. நூ: அண்ணம் தன்னை நாநுனி வருட
       ரகரமும், ஒற்றிட றகரமும் பிறக்கும்.

    பொ: அண்ணப் பகுதியை நாவின் நுனி எழுந்து வருட ரகரமும்,
ஒற்றிட றகரமும் பிறக்கும்.

18. நூ: தனிநன் கொலிக்கும் ழகரம்அண் ணத்தை
      நுனிநா எழுந்து வருட வருமே.

    பொ: தனித்தொலிக்கும்போது நன்கொலிக்கப்படும்  ’ழ’ -
அண்ணத்தை நுனிநாக்கு எழுந்து  வருடுவதனால் ஒலிக்கும்.

தனி நன்கொலிக்கும் என்றதனால் சொல்லிடைப் படுத்தி வழக்கில்
ஒலிக்குங்கால் மக்கள் செம்மையாய்ப் பலுக்குவதில்லை (உச்சரிப்பதில்லை)
என்னும் உண்மை நிலை கூறியவாறு.

19. நூ: மேற்பல் வரிசை மிடைந்த அண்ண
       மேற்பால் முன்னடி நாதடித் தெழுந்து
       வருட ளகரமாம்; ஒற்ற லகரமாம்.

    பொ: மேற்பல் வரிசை நெருங்கிய மேற்பால் அண்ணத்தில் பல்லடி
சார்ந்து நாதடித்து எழுந்து தடவ, ‘ள’கரம் தோன்றும்; ஒற்ற, ‘ல’கரம்
தோன்றும்.

    இவ்வாற்றானே இவ்விரண்டிற்கும் வேறுபடுத்துப்
பெயரமைக்கப்படுவதைப் பின் (நூ 25) காண்க.

20. நூ: நுனிநா அண்ணம் உறவரும் ணகரம்;
      அண்ணம் பல்லுக் கிடையில் நாநுனி
      விரிந்து சேர நகரம் பிறக்கும்.

    பொ: நுனி நாக்கு அண்ணத்தைப் பொருந்த ணகரம் தோன்றும்;
அண்ணம், பல்-இவற்றிடை நாவின் நுனிவிரிந்து சேர்வதனால் ‘ந’ கரம்
பிறக்கும்.