117. நூ: ‘உயர்திணை உம்மைத் தொகை பலர் ஈறே.’
பொ:
உயர்திணை ஒருமையில் வரும் உம்மைத் தொகைகள் பலர்பால்
ஈறானர, கள் இறுதி கொள்ளும்.
சா:
சேர சோழ பாண்டியர்; மாணவ மாணவிகள்.
118. நூ: உவமைக்குரிய இருபொருட் சொற்கள்
பெயரெச் சத்தின் வடிவுடைப் போற்சொல்
விரிக்க நிற்பது உவமைத் தொகையே
பொ:
உவமானமாகவும், உவமேயமாகவும் வந்து உவமைப்
படவேண்டிய இருபொருளின் சொற்கள் தங்கட்கு இடையே
போல் என்னும்
இடைச்சொல்லைப் பெயரெச்ச உருவத்தில் போல என்று விரித்துப்
பொழிந்துமாறு
இணைந்து நிற்பது உவமைத் தொகையாம்.
சா:
தாமரை (போன்ற) முகம்; மழை (போன்ற) கை.
புலிபோலப் பாய்ந்தான் எனத்தொடரில் வினையெச்சம் வரினும்
புலிப்பாய்ச்சல் எனத்தொகுப்பின்
புலிபோலும் பாய்ச்சல் எனப்
பெயரெச்சமேற்கும்.
119. நூ: தன்மை அளவு வண்ணம் வடிவென்
றின்னன குறித்தே எழும்பண் புத்தொகை.
பொ:
தன்மையும் அளவும், வண்ணமும், வடிவமும் என்றிவை குறிக்கும்
விடைகளொடு அவற்றின் பண்புச்சொல்
இணைந்தெழுவது
பண்புத்தொகையாம்.
|
சா: |
கருங்குதிரை |
- |
கருவண்ணக்குதிரை |
|
|
வட்டக்கல் |
- |
வட்டவடிவக்கல் |
|
|
இன்சொல் |
- |
இனியதன்மைச்சொல் |
|
|
ஒரு நிறைபொன் |
- |
ஒரு நிறையளவு பொன். |
இவ்வாறு பண்பை விரிக்குங்கால் அதன் பண்புச் சொல்லை இட்டே விரித்தல் நன்றாம்.
விரி: ‘ஆகிய’ என்னும் சொல்லையே அனைத்திற்கும் இட்டு விரித்தல்
உரையாசிரியர்களின்
பொருந்தா முடிபு. நன்னூலாரும் ‘பண்பை விளக்கும்
மொழிதொக்கன’ என இக்கருத்துப் பற்றியே கூறியுள்ளார்.
எண்ணல்,
நிறுத்தல், முகத்தல், நீட்டல் என அளவு நான்கு வகையாகும்.
120. நூ: பொதுப்பெயர் தனிப்பெயர் இரண்டும் பொருந்தின்
இருபெயரொட்டுப் பண்புத் தொகையெனல்.
|