பக்கம் எண் :
 
பெ

    பொ: காரணத்தாலோ இடுகுறியாலோ அமைந்த ஓரினத் தொகுதிப்
பெயராய பொதுப்பெயரும், அவற்றொன்றாய தனிப்பெயரும் பொருந்தி
நிற்பின், இருபெயர் ஒட்டுப் பண்புத்தொகை என்னலாம்.

 

  சா: வேழக்கரும்பு - வேழவகைமரம்
    பனைமரம் - பனைவகை மரம்
    சாரைப்பாம்பு - சாரைவகைப் பாம்பு
    ஆயன் சாத்தன் - ஆயன்குலச் சாத்தன்.

    இருபெயர் ஒட்டு விரிக்க வகை, குலம் என அவ்வியல்புச் சொல்லே
பயன்படல் காண்க.

121. நூ: வினைமுதனிலையொ(டு) இயைபெயர் வினைத்தொகை.

    பொ: வினையின் முற்கூறாய முதனிலையோடு ஒரு பெயர் ஒன்றி
நிற்பது வினைத்தொகை.

    சா: எரிதழல்; கொல்களிறு; சுடுசோறு.

    எரிகின்ற-தழல், எரிந்ததழல், எரியும்தழல் என விரிந்து வினைத்
தொகை முக்காலம் காட்டும் என்பது இலக்கணமன்று அச்சொல்
பயன்படுபொழுதிற்குரிய காலமே உரித்து.  அரிவாள், ஊறுகாய் முதலியன
நிலைப்பெயராய் அமைந்துவிட்ட வினைத்தொகைகள்.

    சேனாவதையர் வினை பண்பு, அன்மொழித்தொகைகளை வலியுறுத்தி
ஏனையவற்றை நெகிழக்கூறினும் உருபொடுபயனும் மறைதலால்
வேற்றுமைத்தொகையும், எடுத்துக்காட்டுவமை செவ்வெண் போன்றவற்றால்
உவமை உம்மைத்தொகைகளும் சொற்கூடித் தொகையாதல் காண்க.

122. நூ: இவ்வைந் தொகையும் நிலைக்களமாக
       மற்றொரு பொருட் சொல்விளைவது அன்மொழி.

    பொ: மேற்கூறிய ஐந்து தொகையின் பொருளமைப்பே
நிலைக்களமாகக்கொண்டு, ஐந்தொகையின் பயனாய் ஒரு பொருட் சொல்
முளைப்பது அன்மொழித் தொகையாம்.

 

  சா: பூங்குழல் - பூவையுடைய குழல் - இரண்டாம் வேற்றுமைத் தொகை
    பூக்குழல்  - பூவும் குழலும் - உம்மைத்தொகை
    அறற்குழல் - அறல் போன்ற
குழல்
- உவமைத்தொகை
    கருங்குழல்  - கருவண்ணக் குழல் - பண்புத் தொகை
    தாழ்குழல் - தாழ்ந்த குழல் - வினைத்தொகை