நூற்பா பழந்தொகுதி மட்டும் கூறிற்று. பிற என்பதனான் பிற்
கூறப்படும் புது வழக்குகளை
பொருந்துமாறு அடக்கிக்கொள்க. இடைத்
தன்மை வாய்ந்த இன்ன பிறவும் பொதுவியலிற் கூறப்படும்.
எடுத்துக்காட்டுகள் அவ்வவ்விரிவிற் காண்க.
127. நூ: வினாச்சுட்டு வேற்றுமை முன்னே விளங்கின.
பொ:
வினாவும் சுட்டும் வேற்றுமை உருபுகளும் முன்னே
விளக்கப்பட்டன. இஃது உரைத்தாம் என்பது; ஏனையவை
உரைத்தும்
என்பது.
128. நூ: சொல்லின் உறுப்புகள் அடுத்த இயலாம்.
நு:
எனவே அவை தவிர்ந்தன இங்குரைப்பாம் என்றபடி.
129. நூ: ஏவே தெளிவு பிரிநிலை அசையே.
பொ:
ஏமுப்பொருளுடையது.
சா:
அசை: அலங்கணிந்தருளே, இறுதியில் வருவதை ஈற்றசை என்றும்
கூறுவர்.
பிரிநிலை |
: |
அமெரிக்காவே பொருளியல் வளநாடு. |
தெளிவு |
: |
சோவியத்து நாடே பொதுமை ஆட்சிச் சான்றது. |
130. நூ: எதிர்மறை ஐயம் அசைநிலைக்குரிய
ஓவே வழக்கில் ஆவாய் நடக்கும்.
பொ:
முப்பொருள் உடைய ஓ இற்றை வழக்கில் ஆவென ஒலித்து
இயலும் என்பது.
சா:
‘மன்னவனும் நீயோ: வளநாடும் உன்னதோ’-நேதாசி உளரோ
இலரோ. இவை ஆவாய் ஒலித்தல்
மாற்றியுணர்க. ஊரிரேயோ! ஒள்ளழல்
ஈமம்தாரீரேயோ! ஏவும் ஓவும் வினாப்பொருள் தருதல் முற்கூறப்பட்டது.
131. நூ: இருவகைப்பட்ட எச்சமும் சிறப்பும்
எதிர்மறை அளவும் முற்றும் உம்மை.
பொ:
இறந்தது தழுவிய எச்சமும், எதிரது தழுவிய எச்சமும்
என்றிருவகைப்படும் எச்சமும், இழிவு சிறப்பும்,
உயர்வு சிறப்பும் என்று
இருவகைப்படும் சிறப்பும், எதிர்மறைப் பொருளும், அளவும், முற்றும்
காட்டும்
உம்மை.
சா:
ஒரு பொருள் தந்து-‘இன்றும் கொள்க, இதுவும் கொள்க’ என்பன
நேற்றும் கொண்டாய், முன்னதும்
கொண்டாய் என்னும்
|