பொருள் தழுவின் இறந்தது தழுவிய எச்சஉம்மையாகவும், நாளையும்
கொளலாம், பின்னதும் கொளலாம் என்னும் பொருள் தழுவின் எதிரது
தழுவிய எச்சவும்மையாகவும் பொருள்படுதல் காண்க.
விழாவிற்கு அமைச்சரும் வந்தார்
தக்கஅறிஞர் இல்லாததும் ஒருமாநாடோ.
இவை முறையே உயர்வு சிறப்பும் இழிவு சிறப்பும், எதிர்மறையும்
என்பது பாவிற்காக மறைந்தது.
எதிர்மறை: வந்தாலும் வருவேன்; தரினும் தரலாம்.
பதினொன்று-பத்தும் ஒன்றும் கூட்டலமைப்புடைய எண்ணிடை
உம்மைத் தொகையாம். இருபது போன்ற
பெருக்கல் பண்புத்தொகை.
அளவு என்றமையான் ‘வானும், காற்றும், தீயும், நீரும், மண்ணும்
ஐம்பெரும் பொருள்கள்’ என்பதும்
அடங்கும்.
எல்லாரும் வந்தனர்; மூவேந்தரும் தமிழ் தாங்கினர் என்பன முற்று.
132. நூ: மற்றென்பதுபொருள் மாற்றம்; அசையே.
சா:
மற்றென்னும் சொல் பொருள் மாற்றுவதாயும் அசையாயும் வரும்.
சா:
‘கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை’-பொருள் மாற்று.
‘எற்றோ மற்றெற்றோ மற்றெற்று’-அசை. மற்றபடி என்பது இரண்டன் பொருளிலும் வரும் வழக்கு
வடிவம். மற்று-மற்றை எனவும் மாறும்.
133. நூ: என்று சொல் எனும்பொருள் கொண்டஎன் அடியாய்
வினைபெயர் எச்சம் ஆறும் தோன்றும்.
பொ:
‘என்று சொல்’ என்னும் முதனிலைப் பொருள் உடை முதனிலை
வடிவாய ‘என்’ என்பதன் அடியாய்ப் பெயரெச்சம்
வினையெச்சம் ஆகிய
இரண்டும் முக்கால முறையே அறுசொல்லாய்த் தோன்றும்.
சா:
என் - என்ற - என்கின்ற - என்றும்; பெ. எ. என்று - என
எனின் - வி. எ. எனப்படும் என்பது செயப்பாட்டுவினையுருவம்.
134. நூ: போலென் சொல்லும் ஈரெச்சம் பெறும்
பொ:
‘போல்’ என்னும் இடைசொல்லும் இருவகை எச்சமாம்.
|