சா:
போல் - போன்ற - போல்கின்ற - போலும்; - (போலின்) போல -
போன்று. செய்யின் என்றும்
வாய்ப்பாட்டு வினையெச்சப் பொருள்
பெறாமையின் மேலது போலாது ஈரெச்சம் எனச் சுருங்கக் கூறப்பட்டது.
சிறுவழக்கு: பருகுவார் போலினும் (திருக்குறள்)
135. நூ: மன் அசை உறுதி கழிவு நிலைபெறல்
கொல் அசை ஐயம் இவை இவை தொன்மை
பொ: மன்நாற் பொருளிலும் கொல் இரு பொருளிலும் வரும்.
இவைபோல்வனவெல்லாம் தொன்மை
வழக்கு.
|
சா: |
பிணிக்கு மருந்து பிறமன் |
|
- |
அசை |
|
|
|
மண்புக்கு மாய்வது மன் |
|
- |
உறுதி |
(திருக்குறள்) |
|
|
சிறியகட்பெறினே எமக்
கீயுமன்னே (மன்னைக்காஞ்சி) |
} |
- |
கழிவு |
(புறம்) |
|
|
மன்னுயிர்க்கெல்லாம் இனிது |
|
- |
நிலைபெறல் |
|
|
|
மன்னன் என்புழிப்பெருமையோ மிகுதியோ படுதல் |
|
- |
ஒரு சார் |
|
|
|
கற்றதனாலாயபயன் என் கொல் |
|
- |
அசை |
|
|
|
கனங்குழை மாதர் கொல்
|
|
- |
ஐயம் |
|
136. நூ: தானென் பொதுப்பெயர் ஏவின் திறம்பெறும்
பொ:
தான் என்னும் பொதுப்பெயர்ச் சொல் ‘ஏ’ என்னும் இடைச்சொல்லின் இயல்புறும்.
சா:
தமிழர்கள் இனிமேல்தான் விழிக்க வேண்டும் - தெளிவு உலகில்
இந்தியாதான் தெளிவுற வேண்டுவது
- பிரிநிலை. நான்தான் சொன்னேன்;
அவன்தான் செய்தான்.
‘கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான்
குடிக்கத்தான் கற்பித்தானா’? என்பது அசை மிகை.
அவனேதான் என ஏவின்பின்வருமே எனின்
அவனாலேயே - என ஏயும் அத்திறம்படல் காண்க.
137. நூ: தோறும் என்பது ஒவ்வொருபொருள் தொகை.
பொ:
தோறும் என்னும் சொல் ஒவ்வொரு என்னும் பொருளில்
இரண்டு சொல் தொகும் பொருள் தரும்.
ஞாயிறு தோறும் விடுமுறை
நாள்தோறும் பயில்.
|