பக்கம் எண் :
 

    வீடுதோறும் வாயிற்படி என்பதை வீட்டுக்கு வீடு வாயிற்படி என்பது
பழமொழி.  அறிதொறறியாமை கண்டற்றால் (திருக்குறள்)

    ‘இது காறும் காத்திருந்தேன்’ எனக்கால எல்லைகுறிக்கும்
சொல்லிற்குக்கால் அடியாதல் போல் இதற்குத் தோல் (தோன்றல்)
அடியாகலாம்.

138. நூ: ஊமென் ஒலிக்குறிப்(பு) அசையொடு மேற்கொளல்

    பொ: ஊம் என்பது அசைப்பொருளும் மேற்கொண்டதைக் காட்டும்
பொருளும் தரும்.

    சா: புறனியார்க்கு ஊம்போடல் அசை.  கேட்புக்குறிப்பு ஊம்-‘மேலும்’
என்பது.  ஊம் + ஊம் - என்றிணைந்து வருங்கால் உடன்பாடும், திரிந்து
ஊகூம் என்புழி மறுப்பும் வெளிப்படும்.

139. நூ: ஆமே இக்கால் உடன்பாடுரையசை.

    பொ: ஆம் என்பது இக்காலத்தே உடன்பாடாகவும் பேச்சிடை
அசையாகவும் வரும்.

    சா: ஆம் - இல்லை என்பது உடன்பாடு பேச்சிடை பிறர் கூறுவதை
ஆம்போட்டுக்கேட்டால் அது உரையசை ஆம்+ஆம்-ஆமாம் என
இணைந்துவரினும் அத்தன்மைத்து.  இக்கால் என்றது ஆகும் என்பதன்
செய்யுமென் இடைநழுவலாய் இச்சொல் தோன்றியது இக்காலே எனற்கு.

    ஊமொடு ஆமைச்சேர்த்து மொழியாமை அஃது ஒலிக்குறிப்பும் இஃது
பொருட்குறிப்பும் உடைமையே.

140. நூ: சரியெனல் உரையசை ஏற்றுக்கோடல்.

    பொ: சரிஎன ஒப்புவது உடன்பாடு. இஃது சரிசரி என அடுக்கி
வருங்கால் வலியுறுத்தல், உரைமுடித்தல் போலும் குறிப்புணர் கருத்தாதலின்
தனித்துக் கூறப்பட்டது.

141. நூ: பிறவென் சொல்லடி ஐம்பால் தோன்றும்.

    பொ: பிற என்னும் சொல்லடியாக ஐம்பால் உருபும் ஏறி ஐம்பாற்
சொல் தோன்றும் என்பது.

    சா: பிறன்; பிறள்; பிறர்; பிறிது; பிற; பலவின் பிற என்பது இயல்பாய்
நிற்பதன்று; அகரம் ஏறியது.

142. நூ: பழமை இலக்கியப் பாங்கினில் பற்பல
       மொழியசை உள; அவை முதுநூல் வழிப்படல்

    பொ: பழைய இலக்கியங்களில் நயப்பாங்கொடு பலவகையான
சொல்வரிசைகள் உள்ளன.  அவற்றைப் பழைய நூல்கள் வழிச் சென்று
காண்க.  (விரிவு) ‘விழைந்ததாலோ’; தில்; நடத்தரோ.