பக்கம் எண் :
 
147

147. நூ: முதனிலை சந்தி திரிபே இடைநிலை
        சாரியை இறுதி நிலையிவை ஆறே
        சொல்லமை உறுப்பின் உள்ளமை வகையே.

    பொ: முதனிலை, சந்தி, திரிபு, இடைநிலை, சாரியை, இறுதி நிலை
இவை ஆறும் சொல்லாய் அமைந்த உருவத்தின் உள்ளமைந்திருக்கும்
வகைப்பாட்டுறுப்புகளாம்.

    சா: சொல்லின் உறுப்பு வரிசை முறைப்படிக் கூறப்பட்டன.

    மு     இடை   சா   இறு
நடந்தனன் = நட + ந் + த் + அன் + அன்
    மு   இடை   சா   இறு    
நின்றனள் = நில் + ற் + அன் + அள்    
    ல் - ன் திரிபு.          

    பெரிதும் திரிபும் சந்தியும் ஒரு சொல்லிடைப்படா.

    வி: நன்னூல் போலும் முன்னூல்களில் பகுதி விகுதி என்றதை இங்கு
முதனிலை இறுதிநிலை என்றது முன்பகுபதம் என்றதை வட சொல் நீக்கப்
பகுசொல் என்றது போன்றது அன்று.  பகுதியும், விகுதியும் பகு - வகு
அடியாத் தோன்றியதாய தமிழ்ச் சொற்களே.  இவற்றைப் பொருள்
நயங்கருதியும் அம்மொழியிற் பயிற்சி காட்டவும் பிரகிருதி - விகிருதி எனுஞ்
சொற்களின் திரிபு என்பார் கருத்து, உண்மையை ஒளித்தலாகாது. 
இங்கவற்றை விலக்கும் எண்ணமின்றேனும் பகுத்தலும் வகுத்தலும்
எவ்விடத்தென்னும் ஐயம் தொடக்க நிலையாளர்க்கு இடராமாகலின்
இடந்தெளிவுறுத்தவும் முற்கையாட்சியுடைமையானும் முதனிலை, இறுதிநிலை
என்னும்சொற்களே கையாளப்படுகின்றன அன்றிவேறில்லை.

148. நூ: முதனிலை இறுநிலை குறைவளவாக
        மிகு நிலை ஆறும் மேம்படும் அவையே.

    பொ: அவ்வாறுறுப்புகளில் குறைவாக முதனிலையும் இறுதி நிலையுமாம்
இரண்டும் மிகுதியாய் ஆறும் வந்து பகு சொல்லை வளப்படுத்தும்.

  சா: அலுவலர் = அலுவல் + அர்            
        மு இடை            
    செய்வான் = செய் + வ் + ஆன்        
    வந்தனள் = வா + ந் + த் + அன் + அள்
        வா - - திரிபு.