பக்கம் எண் :
 
149

முதனிலை

149. நூ: சொன் முதல் நின்று பெயர்வினை யாகும்
       முன் யே சொல்லின் பொருட்கரு.

    பொ: சொல்லுக்கு முதலில் நின்று பெயரெனவினையென விளக்கும்
முன்னுறுப்பாகிய முதனிலையே சொல்லின் பொருள் கருக்கொள்ளும்
இடமாம்.

    சா: படி/த்தான்; பா/வலன்.

150. நூ: அனைத்துறுப் பமையும் வினையில் முதனிலை
        செய்யெனும் ஏவற் சாயலடையாளம்.

    பொ: பெயர் வினை என்ற சொல்வகையில் சொல்லுறுப்புகள்
அனைத்தும் வரத்தக்கதான வினைச்சொல்லின் முதலை, ‘செய்’ என்னும்
வாய்பாட்டு ஏவல் ஒலிச்சாயலே அடையாளமாகப் பிரிக்கலாம்.

    சா: உண்/டான்; நட/ந்தான்; பாடு/வான்; மகிழ்/ந்தான்.

    வி: செய்யென்னும் ஏவற்சாயல் அடையாளம் எளிதின் பிரிப்புதவியாதல்
பற்றிக் கூறப்பட்டதேயன்றி இரண்டும் ஒன்றன்று.  ஏவலடையாளம் என்றது எழுந்திருந்தான் என்பதற்கு எழுந்திரு முதனிலையும்,
வந்துகொண்டிருக்கிறான் என்பதற்கு வந்துகொண்டிரு என்பது முதனிலையும்
எடுத்து விடுவான் என்பதற்கு எடுத்துவிடு முதனிலையும், கொடுத்திடுவான்,
வைத்துக்கொண்டான் என்பவற்றிற்குக் கொடுத்திடு வைத்துக்கொள்
முதனிலையும் ஆக, துணை வினைகள் நடப்பதைக் கண்டறிதற்கே
(எழுந்தான் எழுந்திருந்தான், எழுந்துகொண்டிருந்தான் என்பனவற்றில்
முறையே எழு, எழுந்திரு, எழுந்துகொண்டிரு என்பனவே முதனிலையாம்
பிறவுமன்ன)

    திரு கிரால் என்பவர், சொல்லமைப்பை நோக்கி முதனிலைகளை செய்,
ஆள், சொல், அறி, ஆக்கு, நடு, உண், தின், கேள், கல், தீர், நட
எனப்பன்னிரண்டாய்ப் பட்டியிட்டுக் காட்டுவார்.  அஃதும் ஒருவகைப்
பயன்பாடுடையதே.

    சா: ஆள்வான் (ஆண்டான்), உண்டான் - கேட்டான்; கற்றான் -
தின்றான்; கொன்றான் - சொல்கிறான்; நடக்கிறான் - அறிகிறான்; தீர்ந்தான்
- செய்தான்; ஆக்குவான் - நடுவான்.

151. நூ: மையெனும் இறுதி நைய நிற்கும்
       உண்மைப் பண்பு முதனிலை அடைகள்
       புறவுறுப் போடு திரிபுறக் கூடும்.

    பொ: மையிறுதியுடைய பண்புச் சொற்களில் அம் ‘மை’ எனும்
துணைக்குறி நீங்க நிற்கும் உண்மையான பண்பு முதனிலைகள்
அடைகளாகிப் பிறவுறுப்புகளோடு பலவகைத் திரிபுற்றுப் புணரும்.

    சா: மை பண்பிறுதியாதல் சாதன்மை (திருக்குறள்) தமர்மை (பரிமேல்)
வின்மை (வில்லி) முதலிய ஆக்கங்களால் அறிக.