பக்கம் எண் :
 

    வி: நன் + மை; செம் + மை முதலியவற்றில் மையிறுதி இன்மையே
உண்மைப் பண்புக்குறி என்பது.  இம்’மை’ இறுதி, மெய் என்பதன்
திரிபெனக் கொண்டு பொய் + மெய் - பொம்மை எனக் (மொழிநூல் - முவ)
காட்டுவது பொருந்தாது பொம்மல் முலையார் (நீ. வி) என்று பொம்மல் -
புடைத்திருத்தல் என்னும் பொருளில் பொம்மல் ஆட்டம் அமைந்து திரிந்தே
பொம்மையாகலின் (பார்வல் - பார்வை).

    நல்லவன்; இல்லை; அல்லன்; மெல்லிதழ் என்பன; நல், இல், அல்,
மெல் அடியாய்த் தோன்றுவன.

    பெரியன், கருப்பன், சிறியன், அரிது என்பன - பெரு, கரு, சிறு, அரு
முதலாய்த் தோன்றின.

    நெட்டெழுத்து, புத்துணர்வு, சிற்றின்பம், வெற்றிலை என்பன - நெடு,
புது, சிறு, வெறு இரட்டித்துத் தோன்றியன.

    சீறூர் (பு. வெ.) சீறடி (சிலம்பு) என்பன நீண்ட திரிபுப்புணர்ச்சி.

    நுண்ணறிவு, திண்ணியர், தண்ணீர் என்பன - நுண், திண்; தண்
மேலிட்டுத் தோன்றியன.

    செந்தமிழ், பசும்புல், சேயரிக்கண், பாசிலை என்பன - செம், பசு,
நின்றும், நீண்டும் தோன்றியன.

    பசுங்கண் - பைங்கண் என்றும் திரியும் - கசப்பைக் கைப்பு என்றாங்கு.
   பையன் = பசு + அன் + பசியன் + பையன்; பயல், பசங்கள் என்னும்
வழக்காலறிக.

    இங்குக் காட்டிய பண்புச் சொற்கள் மையிறுதியாதல் கூட்டியுணர்க. 
நன்னூல் இப்புணர்ச்சிக்கு விதிநூற்பா இயற்றியுளதே எனின்-அதில் முன்
கூறிய பண்புச் சொற்புணர்ச்சி முற்றும் அடங்காமையின் தனி நூற்றிலம். மேற்கூறிய பண்புச் சொற்புணர்ச்சித் திறனைப் புணரியல் பயிற்சியால் புரிக;
இஃது ஒரு சொல்லினுள் அன்றி இரு சொற்புணர்ச்சி போலாதலின்.

152. நூ: ஒப்புரு படியாய்ப் பிறக்கும் சொற்கள்
       முதனிலை பிரிப்பின் அகர இறுதியாம்.

    பொ: உவமை உருபுகள் அடியாய்த் தோன்றும் சொற்களில்
முதனிலையைப் பிரித்தால் அகர இறுதியாய் நிற்கும்.

    பண்பு முதனிலைகள் தனித்திருக்குங்கால் மையிறுதி பெறல் போன்றே
இஃதும் ஆதல் இரண்டையும் அவ்வாறே வழங்கிவரும் பண்டைய வழக்கு.