|
சா: |
ஒத்தான் |
- |
ஒ(ப்ப) |
+ |
த் |
+ |
த் |
+ |
ஆன் |
|
|
அற்று |
- |
அன்(ன) |
+ |
து |
|
|
|
|
|
|
அனையர் |
- |
அனை(ய) |
+ |
அர் |
|
|
|
|
153. நூ: கொணாகாண் சாஇவை இறப்பிற் குறுகும்.
சா:
கொணர்ந்தான், உண்டான், செத்தார்.
விரி: உணர்ந்தான் என்னுஞ் சொற்கு உணர் என்பதே முதனிலையாக
கொணா எனல் என்னெனின்,
கொண்டுவந்தான் > கொண்டாந்தான்
கொணாந்தான் > கொணர்ந்தான்=என்று திரிபுற்றமையின் அது
தோன்ற கொணா என்றே பிரித்தல் வேண்டுவதாயிற்று.
மற்று பிற
இரண்டிற்குத் தள்ளாதுரிய இறப்பில் மட்டென இதனையும் இணைத்துக்
கூறியது கொண்டுவருவான்,
கொண்டுவருகிறான், கொணருவான்,
கொணருகிறான் என்றியல்பாதலொடு கொணர் என்று பிரித்தல் பிழையன்று
எனலுமாம். கண் டான் என்பது காண்பான், காண்கிறான் எனப் பிறவிரு
காலத்தும் இருத்தலின் குறுகிற்றென்றாம்.
‘செத்தாரைச் சாவார் சுமந்து’ (நாலடியார்) செத்தார் என்பது மக்கள்
ஒலிப்போக்கான் திரிந்து
குறுகியது. சத்தான் என்றாகாமை - யான் > என்
திரிபில் ஆ > எ ஆயதோடு ஒப்பிடுக. இஃதறியாது
சிலர் செற்றார் >
செத்தார் என்றாயது என்று குழப்புவர் (செறுதல்-பகைத்தல்). கொணா-பிறவிரு
காலத்தும் குறுகுதல் உண்டாகலின் அடக்கிக் கூறல் பற்றி
மொழிந்தாம் என்க.
154. நூ: வாதா முதனிலை முத்திரி புறுமே.
பொ:
வா, தா என்னும் இருமுதனிலை முவ்வகையில் திரிபடையும்.
சா: |
வா:- |
வந்தான்; |
வருகிறான், |
வருவான்; |
வாரீர் |
|
|
வம்/ |
வரு/ |
|
வார்/ |
|
தா:- |
தந்தான்; |
தருகின்றான், |
தருவான்; |
தாராய் |
|
|
தம்/ |
தரு/ |
|
தார்/ |
இன்றறியும் முறையில் எளிமைக்காக நூற்பா இயற்றப்பட்ட தேனும் வம்,
தம்; தனித்தன்மை ஆதலும்
வரு, தரு-திரிபாய் வார், தார்-அமைந்து பின்
வா, தா தோன்றியிருத்தலும்வேண்டும்.
‘வம்மின்கள் தாயரீர் மாலையது
வாங்கித் தம்மின்கள்’ (விக்கிரம சோழனுலா)
|