பெரும்பாலும் என்றது புக்கான் நக்கான் என்பன புகுந்தான், நகைத்தான்
என்று முடிதலும்; விட்டான்
விடுத்தான் இவ்வியல்பாயினும் பொருளுணர்வு
வேறுபடலும் நட்டான் என்பதற்கு நடுத்தான் என்று
மாற்றுருவின்
மையும்ஈங்குக் கூறாதது, (பெற்றத்தால் பெற்றபயன்) பெயரிடத்து
இவைபோன்றே இரட்டித்தல்
உண்மையும் அடங்கநூற்றது. இவ்விளைவு
தகர இடைநிலைச் சேர்க்கை என்பது ஆய்வு (திரு. வேங்கடராசுலு)
எத்தால் மறவாதே - எதால் (சுந்தரர்) தபு - தப்பு;
இறுதிநிலை
157. நூ: அன் ஆன் அள் ஆள் அர் ஆர் கள்ளே
து, று அ, வை, கள் இறுதிணை ஐம்பால்
என்ஏன் ஆம்ஓம் ஏம்அம்எம் தன்மை,
முன்னிலை ஐஆய் இர்ஈர் உம்மின்
ஈரெண் இறுநிலை இவைபல வழக்கில
பொ:
படர்க்கை முன்னிலை தன்மைகளின் ஒருமை பன்மைகட்கு
உரியனவாய இறுதிநிலைகள் இவையாம், இவற்றுள்
பல இலக்கிய
வழக்கேயுடையனவும் சில நடை வழக்கிற்கே உரியனவுமாம். இவற்றிற்குரிய
காட்டுகள்
வினையியலிற் காண்க. கள் இரண்டும் இருபாற்குரியன.
158. நூ: நன் நள் நர்என் உயர்திணை முப்பால்
இறுதி, முதனிலை உருவோடிணைத்துப்
பெயராக்குதலாம் பழமை மீளும்.
பொ:
நன், நள், நர் என்னும் உயர்திணைக்குரிய முப்பால் இறுதி
நிலைகள் முதனிலை தன்மையுடைய வினையின்
சேர்த்துப் பெயராக மாற்றும்
பழமைப் போக்கு இன்று மீண்டும் நன்குதலையெடுக்கிறது.
சா:
ஆடுநர்; வாழ்நள் (வாணன்), செரு மேம்படுந, (பெரும் 456)
அறிநர் (51 பொ) வேண்டுநர் (முருகு
248) பொருநர், நடைமுறைச்சொல்:
இயக்குநர், விளக்குநர், மகிழ்நன், நடத்துநர் ஓட்டுநர்,
விடுநர், பெறுநர்
முதலியன. வலைஞர் அறிஞர், என்பவற்றுள் ‘ஞ்’ இடைநிலை
எனப்பிரித்தல்
போல ‘ந்’ இடைநிலையாகப் பிரித்தல் பொருந்துமேனும் ஞன்
இதுபோலும் தனித்தியங்காமை பற்றியும்
முன்னூல்களில் கூறாமைபற்றியும்
கூறு மாற்றான் பயன்படுத்தும் முறையும் கூறப்பட்டது. மற்று
‘கேட்குநபோலும்
கிளக்குந’ போலவும் என ஒரோ வழிப் பலவின் பாலிற்கும்,
அடுநைபோலவும் விடுநை போலவும் (புறம்
36) எனச்சில முன்னிலைக்கும்
இவ்விறுதி நிலை உருவம் உளதெனினும் தன்மைக்கும் ஒன்றன் பாலிற்கு
முற்றும் இலது. தந்நகரத்தை றன்னகரமாக எழுதல் முழுப்பிழை.
|