கூவி + ற் + று-எனின் கட்டளை முதலில் வரிவடிவம் சிதைதலும் இன்
இடைநிலைக் கூறுபாடும் நிகழும்.
அற்று, இற்று என உவமையடியாகப் பிறப்பன என் + து = எற்று என
வினா அடியாய் தோன்றுவதும், அணிந்தன்று,
போகின்று (புறம்) எனச்
சாரியையாய் வருதலும் பிற‘று’ உருவங்கள்.
181. நூ: பெயரின் உறுப்பைப் பிரித்தறியுங்கால்
முதலும் இறுதியும் முன்னுளவாகப்
பகுத்திடை நிற்பன சிலவே; அவற்றை
வினைச்சொற் பயிற்சியால் விளங்கிக் கொள்ளே.
பொ:
பெயர்ச் சொல்லைப் பிரித்துணரும்போது முதனிலையும்,
இறுதிநிலையும் முன்னுள்ளனவே ஆக, பகுத்தபின்
இடையில் நிற்கும்
இடைநிலை உள்ள சொற்கள் சிலவே. அதனை முறையான் உறுப்பமைந்த
வினைச்சொல்
பிரிப்புப் பயிற்சியால் அறிக என்பது.
சா:
கலைஞர், புரவலன்.
182. நூ: ஆளன் காரன் ஆண்பெயர் இறுதி
ஆட்டி காரி பெண் பெயர்க்கிறுதி
ஆளர் காரர் கள்ளொடு பலர்பால்
இய்யே இருதிணை ஒருமைக்குறுமே.
பொ:
ஆளன், காரன் என்னும் புதிய இறுதி நிலைகள் உயர்திணை
ஆண்பால் காட்டும். ஆட்டி காரி அவ்வாறே
பெண்பாற்குரியன ஆளர்,
காரர், கள்ளொடு நின்று பலர் பால் இறுதியாம். ‘இ’ என்னும் இறுதி
இருதிணை ஒருமையில் ஏற்றபடிவரும்.
சா:
ஆள் + அன் - ஆளன், ஆள் + த் + இ = ஆட்டி.
வி:
இவை முற்றும் புதியன அல்ல. ஆடுஉ, மகடுஉ என்னும்
சொல்லடி மாற்றங்களே திருவாளன், திருவாட்டி,
பொறியாளன், வேட்பாளன்,
பெண்டாட்டி, வைப்பாட்டி, தின்னுதல் முதனிலை நீண்டு
இகரம்பெற்று’தீனி’எனத்தின்பொருள்
குறித்தும், குறிப்பின் மெய் இரட்டித்து
இகரம் பெற்றுத் தின்னிஎனத் ‘தின்பானைக்’ குறித்தலும்
நோக்குக உண்ணி,
ஊருணிபோலவும் பல. பாற்காரன், கடைக்காரன், வேலைக்காரி,
கூடைக்காரி, ஊர்க்காரர்,
வீட்டுக்காரர் என்பன மதிப்பொருமை
பணக்காரர்கள், கடன்காரர்கள் பெயரொடு நேரே புணர்ந்து நிற்கும்
இவ்விறு
நிலைகள் மிகப் புதியனவாகலின் தனித்து நூற்பா இயற்றப்பட்டது.
நம்பி, வில்லி - ஆண்பால் ஒருமை
தோழி, பாங்கி - பெண்பால் ஒருமை
|