முதலாளி, தொழிலாளி - இருபால் ஒருமைப் பொது
ஓடுகாலி, போக்கிலி - இழிவொருமை
நண்டுவாய்க்காலி, கன்றுகாலி, நாற்காலி - ஒன்றன்பால்
குறத்தி, குறம் + அத்து +இ
பார்ப்பனத்தி - பார்ப்பு + அன் + அத்து + இ
எனத் திகர இறுதியை முறைமைப்படப் பிரிக்க.
சிறுக்கி |
- |
சிறு |
+ |
க் |
+ |
க் |
+ |
இ |
|
|
தமிழச்சி |
- |
தமிழ் |
+ |
அ |
+ |
ச் |
+ |
ச் |
+ |
இ (தமிழ் + அத்து + இ) |
செட்டிச்சி |
- |
செட்டி |
+ |
ச் |
+ |
ச் |
+ |
இ |
|
|
இரண்டு இடை நிலைபெறுதல் ஒலி நிரம்பல் என்க. அன்றி அத்துச்
சாரியை அச்சு எனத்திரிந்தது
என்பதியையும். பசப்பி, மயக்கி, மினுக்கி
என்பன தெளிவான இகர இறுதிகள். மருத்துவர் -
மருத்து + வ் + அர்
போல் வனவும்கொள்க. மருந்து வலித்து வகர உடன்படுமெய் பெற்று
அமைந்தது.
தந்தை, தங்கை, தம்பி, ஆய்ச்சி இவற்றை ஐ, இ இறுதியாகப்
பிரிக்க.
183. நூ: உடன்படு மெய்; மெய் இரட்டலாம் தோன்றலும்
உயிர்வர உகரம் நகர்வதாம் கெடுதலும்
லளவொடு னணஇவை றடவாம் திரிபும்
உயிர்மெய் சேர்தல் இயல்பும் விரவும்
நு:
சொல்லுறுப்புகளைப் பிரிக்குங்கால் இடையில் விரவும் புணர்ச்சியில்
வேண்டுவதைக் கூறுகிறது.
பொ:
உடம்படுமெய், மெய்யிரட்டல் ஆகிய தோன்றல் திரிபும் உயிர்
வர உகர இறுதித் திரிபும், உயிரும்
மெய்யும் சேரும் இயல்புப் புணர்ச்சியும்
லள முன்மெலியால் னண ஆதலும், வலியால் றட ஆதலும் உள்ளிட்ட
திரிபுப் புணர்ச்சியும், இடையிடை விரவி வரும் என்றது. (இதனால் சொல்லு
றுப்புகள் ஒன்றோடொன்று
மூட்டுவாய் அறிந்து பொருத்தியிருத்தலின்
எவ்வெழுத்தும் நழுவ விடக்கூடாதென்றறிக)
இந்நூற்பா புணரியலில் வரும் சில புணர்வகைகளைத் தொகுத்துத்
தெளிவுறுத்தியதுமாம். அன்றி வழக்காற்றில்
ஒருசொற் பொருளுணரப்
பிரிக்கும் முறைக்கு வேண்டும் புணர்ச்சிப் பெயர்க் கூற்றும் ஆம்.
ல, ள, ன, ண பற்றிய நுட்பம் அந்நூற்பா உரைகளிற் காண்க கூயிற்று
மல்லன், கொத்தினான்,
உளன், இப்புணர்ச்சி விளக்கங்களைப் புணரியலில்
பொருத்திக்காண்க.
184. நூ: சொற்பொருள் அறிந்து பாற்படப் பிரிக்க.
பொ:
சொல்லின் பொருளுணர்ந்து அதற்கேற்பப் பகுதிப்படப் பிரித்தல்
வேண்டும் என்பது.
|