பக்கம் எண் :
 
தெ

    தொகைச்சொற்களைப் பொருளுணர்ச்சியோடு விரித்தல் போலும்
இதுவெனக் கொள்க.

    சா: மாண்ட என் மனையொடு மக்களும் நிரம்பினர் (பிசிராந்தையார்).

    ஆண்டாண்டுதோறும் அழுதுபுரண்டாலும் மாண்டார் மீள்வாரோ. (ஒளவை)

    இதனான் மாண்ட இருபொருளுடைத்து; அவை சிறந்த, இறந்த
என்பன.  சிறந்த எனும் பொருட்கு முதனிலை மாண் என்றும் இறந்த எனும்
பொருட்கு மாள் என்றும் பிரித்தறிதல் வேண்டும்.  மாண்ட முதலமைச்சர்
அண்ணா, மாண்ட தலைமையமைச்சர் நேரு-இவற்றை இருபொருள்படப்
பிரிக்கலாம்.

    சாவான் - (எதிர்மறை) - சா + வ் + ஆ + ஆன்
    சாவார் (உடன்பாடு) - சா + வ் + ஆர்
    எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
    கண்ணென்ப வாழும் உயிர்க்கு,
    முதலிரண்டும் அஃறிணைப்பன்மை-என் + ப் + அ (என்ப)
    பின்னது உயர்திணைப் பன்மை - என் + ப (என்ப)
    உண்டு (வினைமுற்று) உள்+து (டு)
    உண்டு (வினையெச்சம்) உள்+த் (ட்) +உ

    ஆதந்தன்று (பு. வெ. மா.), போகின்று (புறம்), இவை உடன்பாடு தம் +
ந் + த் + அன் + று (து); போகு + இன் + று (து)

    இப்பழைய உடன்பாட்டு உருவத்தில் எதிர்மறையும் வரும்.  அக்கால்
தம் + ந் + த் + அல் + று(து) போகு + இல் + று(து)என எதிர்மறை இடை
நிலைகளாம்.  பதியிலார், தளியிலார் என்பவற்றில் முன்னதில் இருப்பது
எதிர்மறை உருபு.  பின்னது இல்பெயர்; இவ்வேறுபாடுணர்க (கண்) அப்பன்
என்பது பிரிக்கவும் அப்பர் என்பது பிரித்தலாகாமையும் அறிக.