பக்கம் எண் :
 
பெ

    பொ: முன்னென்னும் சொல் காலத்தைக் குறித்தால் கடந்ததைக்காட்டும்
இடத்தைக்குறிக்கும்போது காலம்போல் பின்னுறக் காட்டாது நேர் எதிரே
காட்டும்.

    பின்னென்னும் சொற்கு இதன் எதிர்ப்பொருள் கொள்க.  இந்நூற்பா
முன்னூற் பயிற்சிக்கும் துணையாம்.

        பலா - ‘ப’வுக்கு ‘லா’ - இடமுன்;
        லாவுக்கு’ப’ - காலமுன் - என்றறிக.

191. நூ: இலக்கண விதிகள் எடுத்துக்காட்டால்
       தெளிவுறல் இயல்பு; புணர்ச்சியில் முதன்மை

    பொ: இலக்கணத்திற் கூறப்படும் சிக்கலான விதிகளும்
எடுத்துக்காட்டால் தெளிவுற்று விளங்குவதே இயல்பு.  அவற்றுள் புணர்ச்சி
இலக்கணத்திலோ அவ்வுண்மை முதன்மைபெறும் என்றவாறு.

    ஏனெனின் எடுத்துக்காட்டுகள் எனப்படும் சொற்றிரட்டைக்
கொண்டன்றோ நூற்பாக்கள் அமைவது.  இதைக்கொண்டேபயிற்று முறையில்
விதிவருமுறை, விதிவிளக்குமுறை எனக்கூறுபடுத்துவர்.

192. நூ: ‘சொல்முன் சொல்லும் உருபும் இறுதியும்
        புணர்வழி ஒன்றும் பலவும் சாரியை
        வருதலும் தவிர்தலும் உறழ்தலும் ஆகும்’

    பொ: ஒருசொல்முன் பிறமுழுச்சொல்லும், வேற்றுமை உருபும்
முதனிலைச் சொற்கூறுமுன் இறுதி நிலையும் வந்து புணருங்கால் ஒன்றோ
பலவோ சாரியைகள் வருவதும், தவிர்வதும் உறழுதல் என்னும் வரல், அறல்
இரண்டற் கிடனாதலும் ஆகும்.

    சா: அவற்றை, பலவற்றை தவிராதன.  உள்ள; உள்ளன - உறழ்ந்தன. 
உள்ளபோலும் எச்ச உருப்பெறுவனவற்றை இக்கால் தவிர்த்தெழுதலாம்.

193. நூ: கெடுதல் தோன்றல் திரிதல் என்னும்
       இயல்பல் புணர்ச்சி இயையப் பொருந்தும்

    பொ: எழுத்துக் கெடுதல், புதிதாய்த் தோன்றல், ஒன்று மற்றொன்றாய்
திரிதல் என்னும் மூவகை இயல்பல்லாப் புணர்ச்சி இருசொற்புணர் முறையில்
இயையப்பொருந்திவரும்.

 

சா:

கெடுதல்:

அச்சம்

+

உறுத்தல்

=

அச்சுறுத்தல்

 

தோன்றல்:

செய்

+

நன்றி

=

செய்ந்நன்றி

 

 

பலா

+

பழம்

=

பலாப்பழம்