திரிதல்: |
மண் |
+ |
குடம் |
= |
மட்குடம் |
|
வளை |
+ |
அகம் |
= |
வளாகம் (புறம்) |
|
(வள(ம்)+அகம்=எனப்பிரித்தல் வேறு), |
வி:
செய்யுட்குரியன எனக்கூறும் வலித்தல், மெலித்தல், நீட்டல்,
குறுக்கல் நான்கும் திரிதலிலும்,
விரித்தல்-தோன்றலிலும். தொகுத்தல்
கெடுதலிலும் அடங்கலின் வேறாவதில்லை.
194. நூ: மூன்றுமின் றாயின் இயல்புப் புணர்ச்சி.
பொ:
இயல்பற் புணர்ச்சிக்குரிய மூன்று பிறழ்வுகள் இல்லையாயின் அப்புணர்வு இயல்புப் புணர்ச்சியாம்.
சா: |
அன்பு |
+ |
மகன் |
= |
அன்புமகன் |
|
வந்து |
+ |
சேர்ந்தான் |
= |
வந்துசேர்ந்தான். |
195. நூ: ஒருசேர்க் கையினே இயல்பல் புணர்ச்சியுள்
இரண்டும் மூன்றும் ஏற்பன அடையும்.
பொ:
ஒரு புணர்ச்சியின் கண்ணே இயல்பற் புணர்ச்சி மூன்றில்
ஒன்றேயன்றி இரண்டும் மூன்றும்
சொல்லொலிக்கு ஏற்ப வந்தடைவுபடும்.
சா:
மண்ணாங்கட்டி; தென்னங்கீற்று.
196. நூ: புகைத்தொடர் வண்டிபோல் பொருந்தும் புணர்ச்சியில்
இருப்பிரு தடம்போல் இருப்பன-தொடர்ப் பொருள்
வேற்றுமை வழிஅல் வழியென இரண்டே
பொ:
தொடர்வண்டி போலப் பிணைந்து நீளும் புணர்ச்சியில், அதன்
அடிப்படையாம் இருப்புவழி இரட்டை
போல இருப்பன. தொடரின்
பொருள்பற்றி வகைப்படுத்தப்படும் வேற்றுமை வழி; அல்வழி என இரண்டே.
இவ்விருவழிப் பொருளறிவு இன்மையால் தான் இற்றை யார்க்குப்
புணர்ச்சி முறை புரியாததாயும்
புதிராகவும் உள்ளது.
விரி : புகை உமிழாது மின்னில் ஓடும் தொடர் வண்டிகளைப்
புகைவண்டி எனக்கூற வேண்டா எனினும் தெளிவு
பற்றி
முன்னொட்டாக்கினோம். தொடர்வண்டி போன்ற தொடரில், பெட்டகம்
போலும்
சொற்கள், முன்பின் எழுத்துகளால் பிணைந்திருப்பதனால்
தொடர்வண்டி ஒப்புக் கூறப்பட்டது.
|