பக்கம் எண் :
 

    விரி : அவரா ஈவார்?  தம்பி இளையன்; அந்த அரசன்-எனப் பிரிந்து
நின்றும், நிலவுலகு (நிலவு+உலகு, நில+உலகு) அண்ணா விழவு.  (விழா -
விழவு; இழவு) எனப் பொருள் திரிந்தும்.  உடன்படுமெய் தோன்றாதென்க.
கிடைக்க இல்லை; முடிய இல்லை என்பன பிழை.  இரண்டு உயிர்கள்
அடுத்து நிற்றல் இன்மையின் இரண்டையும் உடன்படுத்த வருமெய்யெனப்
பொருள் கூறுவர்.  உடம்படுமெய் எனத்திரித்து இரண்டு உயிர் ஒருங்கு நில்லா இயற்கையில் இடையில் ஓருடம்பாய் அடுத்த மெய் என்றும் கூறுவர்.

199. நூ: அஇசுட்டு ‘எ’வினாச் சார்ந்திட, உயிர்யா
        எய்தின் வவ்வும் பிறவரின் அவையுமாம்.

    பொ: அ, இ சுட்டுகளையும் ‘எ’ என்னும் வினாவையும் உயிரெழுத்தும்
யாமுதல்பெயரும் அடையின் ‘வ’கர மெய்யும், பிறஎழுத்துவரின் அவையே
மிக்கும் அமையும்

    சா : அவ்வேழை; இவ்வோடை; எவ்வாடை; அவ்யாழ்; இவ்யானை;
எவ்யாறு; அவ்வீடு; இம்மரம்; எக்காலம்.

    ‘யா’ முதல் வருங்கால் அவ்வியாழ் என இகரம் பெற்று ஒலித்தலும்,
இக்கால் பெருவழக்காய அந்த யானை என்னும் சுட்டுத்திரிபும் வரின்
அமைவனவே.

200. நூ: உயிர்வரின் உகரம் மெய்விட்டோடும்;
        பெரும்பால்; சிறுபால் ‘யா’வரின் இய்யாம்.

    பொ: பெரும்பாலும் உயிர் முதல் மொழிவந்தால் நிலைமொழி இறுதி
உகரம் தான் ஏறிநிற்கும் மெய்யைவிட்டு வருமுயிர்ச் சேருமாறு அகலும். 
சிறுபான்மையாக உகரமுன் யாமுதல்வரின் இகரமாய்த் திரியும்.

    சா : மாற்றுடை; இருப்பிடம்;
        ‘ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
        நன்றெய்தி வாழ்வதோர் ஆறு’
        ‘நன்றாற்ற றுள்ளும் தவறுண்(டு); அவரவர்
        பண்பறிந் தாற்றாக் கடை’.
        ‘குழலினிதி யாழினிது’-

    ஓடம் போக்கியாறு முதலியன.  பெரும்பால் என்றது எதுவுயர்ந்தது
என்பதுபோல் கெடாதனவும் ஒருசில உண்டு எனற்கு.  சிறுபாலே
இலக்கியத்து வரக்கூடிய ‘யா’வின் இகரத்திரிபு காட்டுயானை என இயல்பாய்
வரினும் பிழையின்று.

    நன்றியில் செல்வம்; பரிமேலழகியார்-என்பனவற்றுள் வருவனவற்றின்
முதலெழுத்து யகர மாத்திரிய உகரம் இகரம் பெறுதல் சிலவாம்.